Connect with us

கமலை இளமையாக்கிய டெக்னாலஜி; அலண்டு போன லோகேஷ்!

Vikram Poster

News

கமலை இளமையாக்கிய டெக்னாலஜி; அலண்டு போன லோகேஷ்!

Social Media Bar

தமிழில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தமிழில் மிகப்பெரும் நடிகரான கமல்ஹாசனுடன் கை கோர்த்த லோகேஷ் “விக்ரம்” படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

Vikram Poster

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். தனது முந்தைய படங்களான கைதி, மாஸ்டர் படங்களில் கூட கமல்ஹாசன் படங்களின் ரெபரன்ஸ்களை உபயோகித்திருப்பார்.

இந்நிலையில் ஒரு ரசிகனாக இருந்து தற்போது இயக்குனராக கமலின் படத்தை இயக்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ப்ரோமோ வேலைகள் சூடுபிடித்துள்ளன.

Vikram

இதில் கமல்ஹாசனின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் கமலை இளமையாக காட்ட லோகேஷ் கடும் பிரயத்தனம் மேற்கொண்டாராம். இதற்காக கமல் ஐரிஷ்மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தி தொழில்நுட்பத்தை கொண்டு வந்து தன்னை இளமையாக மாற்றியுள்ளாராம்.

கமல்ஹாசனின் இந்த தொழில்நுட்ப அறிவு லோகேஷை வியப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம். படத்தில் சில பகுதிகளில் பழைய விக்ரம் படத்தில் வந்த நம்முடைய க்ளாசிக் கமலையே பார்க்க முடியும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

To Top