News
விக்ரமில் களம் இறங்கிய பஞ்சதந்திரம் குழுவினர்..!
தமிழில் உள்ள வெற்றி இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். முதலில் குறைந்த செலவில் மாநகரம் திரைப்படத்தை இயக்கினாலும் கூட நாட்கள் செல்ல செல்ல வரிசையாக கைதி, மாஸ்டர் என பெரிய ஹீரோக்களை கொண்டு படத்தை இயக்கி தற்சமயம் விக்ரம் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

விக்ரம் திரைப்படம் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் வருகிற ஜூன் 02 அன்று வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க பஞ்ச தந்திரம் படத்தில் வரும் குழுவை களம் இறக்கியுள்ளனர்.
ஆம் பஞ்சத்தந்திரம் திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. அதில் கமல் மற்றும் அவரது நண்பர்களான ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீ மான், யுகி சேது ஆகியோர் இணைந்து கான்ஃப்ரண்ட்ஸ் கால் பேசும் காட்சி இருக்கும்.
அதே காட்சியை மீண்டும் விக்ரம் ப்ரோமோவுக்காக உருவாக்கியுள்ளார் லோகேஷ்.
அந்த காட்சியில் செய்திதாளில் விக்ரம் போஸ்டர் செய்திதாளில் வருகிறது. அதை பார்த்து அவரது நண்பர்கள் உரையாடுவது போல கார்சி அமைந்துள்ளது.
