ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை.. சம்பவம் செய்த OG திரைப்படம்.!

தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் பவன் கல்யாண் இருந்து வருகிறார்.

பெரும்பாலும் பவண் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடத்தில் அவரது நடிப்பில் ஹரஹர வீர மல்லு என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான ஒரு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து பவன் கல்யாண் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் They Call Him OG.

Social Media Bar

இந்த படத்தை இயக்குனர் சுஜித் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ் என்று பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனவே இந்த திரைப்படம் அதிகமாக புக் ஆக துவங்கியிருக்கிறது. இதுவரை புக்கிங் மட்டுமே 116 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது ஓ ஜி திரைப்படம்.