Latest News
ராசியில்லாதவன்னு சொல்றதுக்கு முன்னே..! – பூஜா ஹெக்டே எடுத்த அந்த முடிவு!
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலமாக அறிமுகமானார்.
ஆனால் அந்த படம் தமிழில் ஹிட் அடிக்காத நிலையில் பிறகு, தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்றமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அங்கு சில ஹிட் படங்களை கொடுத்தபிறகு, மீண்டும் நீண்ட காலம் கழித்து பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
ஆனால் இந்த படமும் அவ்வளவு சரியான விமர்சனங்களை பெறாததால் பூஜா ஹெக்டேவிற்கும், தமிழ் சினிமாவிற்குமே ராசியில்லை என்ற ரீதியில் சினி வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
அதேசமயம் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே ஆக்ஷன் படமாக இருந்ததால் தனக்கான ஸ்கோப் அதில் இல்லை என்றும் பூஜா ஹெக்டே வருந்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் மற்ற மொழிகளில் பூஜா நடித்த படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சம்பளத்தை குறைத்து மேலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளாராம். ஆனால் இனி தமிழில் நடிப்பது என்றால் தனக்கு முழு ஹோப் உள்ள காதல் படமாக நடிக்கலாம் என திட்டமிட்டு வருகிறாராம்.