பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு கும்பிடு… பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா!..

Bigboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதலே கமல்ஹாசனிடம் அதிகமாக விமர்சனத்துக்குள்ளான போட்டியாளர்களில் பூர்ணிமாவும் முக்கியமானவர்.

ஒவ்வொரு வாரத்திலும் பூர்ணிமாவை வம்பிழுக்கும் வகையில் கமல்ஹாசன் ஏதாவது ஒன்றை பேசுவதை பார்க்க முடியும். இதற்கு கமல்ஹாசன் பூர்ணிமா மீது ஏதாவது தனிப்பட்ட வன்மம் கொண்டிருப்பாரா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

இதற்கு நடுவே பூர்ணிமா மாயாவோடு சேர்ந்து அர்ச்சனாவை கேலி செய்ததால் மக்கள் மத்தியிலும் இவர் விமர்சனத்துக்கு உள்ளானார். ஒவ்வொரு முறை கமல்ஹாசனோடு பேசும்போதும் பூர்ணிமாவிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததை அவரால் பார்க்க முடிந்தது.

இதனால் மிகுந்த கவலையில் இருந்தார் பூர்ணிமா. இதனையடுத்து இந்த வாரம் பலரும் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் துவங்கியது. அதன்படி இந்த பணப்பெட்டியின் தொகை தினசரி அதிகரித்துக்கொண்டே இருக்கும். அந்த பணம் வேண்டும் என நினைக்கும் போட்டியாளர்கள் அதை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த பெட்டியில் 16 லட்சம் வந்த நிலையில் அதை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறேன் என பிக்பாஸ் வீட்டிற்கு டாடா காட்டியுள்ளார் பூர்ணிமா.