Bigg Boss Tamil
எனக்கு இந்த வார பாய் ப்ரெண்ட் நிக்சன்தான்!.. கமல் சொன்ன பிறகு எடுத்த முடிவு போல!.. பூர்ணிமாவின் திடீர் மனமாற்றம்!..
Biggboss Tamil nixen poornima : போன வாரம் பிக் பாஸில் என்னதான் நிக்சன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் கூட கமல்ஹாசன் வார இறுதியில் பேசும்பொழுது நிக்சனுக்கு ஆதரவாகதான் பேசியிருந்தார்.
வடசென்னை என்னும் அடையாளத்தை முத்திரை குத்தி யாரும் பேசக்கூடாது என்று தினேஷ் மற்றும் மணிக்கு வார்னிங் கொடுத்தார் கமல்ஹாசன். ஆனால் அவர்கள் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என ஒரு குழு இது பற்றி பேசி வருகின்றனர்.
மேலும் சிலர் கூறும் பொழுது கமல்ஹாசன் தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த விஷயத்தை செய்துள்ளார். வடசென்னை மக்களிடம் ஓட்டை வாங்குவதற்காகவே அவர்களை புகழ்ந்து பேசுவதற்காக தினேஷையும் மணியையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நிக்சன் மீது கரிசனம் இருப்பதை கண்ட பூர்ணிமா தற்சமயம் நிக்சன் என்னுடைய இந்த வார பாய்பிரண்ட் என்று கூறி அவருடன் கைகோர்த்து செல்வதை பார்க்க முடிகிறது. எனவே கமல்ஹாசனிடமும் மக்களிடமும் வரவேற்பு பெறுவதற்காக பூர்ணிமா இதை செய்கிறாரா என்று இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் சிலர் கூறும் பொழுது இதற்கு முன்பு பூர்ணிமாவே நிக்சனை தனது தம்பி என்று கூறினார் இப்பொழுது இவர் எப்படி இப்படி கூறலாம் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.