சிங் இன் த ரெயின்.. தலைவன் வந்துட்டாண்டா..! – வைரலாகும் வடிவேலு வீடியோ!

வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் அவர் தற்போது பாடியுள்ள பாடல் வைரலாகியுள்ளது.

Vadivelu

தமிழில் கடந்த பல ஆண்டுகளாக முக்கியமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் வடிவேலு. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு தற்போது மீண்டும் படங்களில் வேகமாக புக் ஆகி வருகிறார்.

வடிவேலு, பிரபுதேவா நடித்து ஹிட் அடித்த படம் ”மனதை திருடி விட்டாய்”. இந்த படத்தில் ஸ்டீவ் வாக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் வடிவேலு பாடும் “சிங் இன் த ரெயின்” பாடல் ரொம்பவே பேமஸ்.

தற்போது நீண்ட காலம் கழித்து மீண்டும் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு நீண்ட காலம் கழித்து மீண்டும் அந்த சிங் இன் த ரெயின் பாடலை பாடியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Refresh