நெருப்பு மாதிரி ஒரு பேர் சொல்லுங்க!.. பெயர் கேட்ட தயாரிப்பாளரை கலாய்த்துவிட்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்!..

தமிழில் கோமாளி திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அவரது திரைப்படங்களுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருக்கும் வாய்ப்புகளும் வந்தன. இந்த நிலையில் அவர் ஏற்கனவே குறும்படமாக இயக்கிய கதையை லவ் டுடே என்கிற பெயரில் படமாக்கினார்.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடித்தார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.

pradeep ranganathan

தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதற்கு பிறகு மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் கூட அதன் டீசர் ஒன்று வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அந்த படத்திற்கு நெருப்பு மாதிரி ஒரு பேர் வேண்டும் என கூறி ஏ.ஜி.எஸ் தரப்பில் இருந்து பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் போட்டனர். அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் வேணும்னா தீப்பொறி திருமுருகம்னு வச்சிக்கலாமா என கேட்டு அவரை கலாய்த்து வைத்துள்ளார்.