எதுக்கு மறைஞ்சு நின்னு அதை பண்றீங்க.. ஒளிப்பதிவாளர் செயலால் கோபமான ரஜினி!..
தமிழ் சினிமா நடிகர்களில் பெரும் உயரத்தை தொட்ட நடிகர்களில் முக்கியமானவர்கள் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாகவே ரஜினிகாந்த் அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றொரு பேச்சு தமிழ் சினிமாவில் எப்போதுமே உண்டு.
ஒரு பெரிய நடிகர் என்றாலும் கூட அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் ரஜினிகாந்த். முக்கியமாக அனைவருக்கும் மதிப்பு கொடுக்க கூடியவர் என்று கூறப்படுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது.
அதனைக் குறித்து அந்த படத்தில் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் யு.கே செந்தில்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். யு.கே செந்தில்குமார் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் எனவே அவர் எப்போதுமே சிகரெட்டும் கையுமாகத்தான் இருப்பார்.
இதனை பார்த்த சுந்தர்.சி ஒரு முறை அவரை அழைத்து அடுத்து நாம் ரஜினிகாந்த திரைப்படத்தில் வேலை பார்க்க உள்ளோம். எனவே ரஜினியின் முன் மட்டும் எப்போதும் புகைபிடித்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். சரி என்று ஒப்புக்கொண்ட செந்தில்குமார் எப்போதும் படப்பிடிப்பிற்கு வரும்பொழுது படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே புகை பிடித்து விட்டு உள்ளே வந்துள்ளார்.
இதை சில நாட்களாக கவனித்த ரஜினிகாந்த் பிறகு அவரையும் சுந்தர் சியையும் அழைத்தார். அவர் செந்தில்குமரிடம் உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டார். அதற்கு செந்தில்குமார் ஆமாம் சார் என்றார்.
உடனே ரஜினிகாந்த் நான் ஒரு சாதாரண நடிகன் மட்டும்தான் மற்றபடி மொத்த திரைப்படத்தையும் உருவாக்குவது நீங்கள் தான் எனவே எனக்காக நீங்கள் ஒளிந்து ஒளிந்து புகை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை இங்கேயே புகை பிடித்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் ரஜினி.