எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த படத்தில் ஆளை மாற்றி ரஜினியை போட்ட தயாரிப்பாளர்!.. புரட்சி தலைவர் நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்!.
Actor MGR and Rajinikanth : தமிழ் சினிமாவில் முதல் கமர்ஷியல் கதாநாயகனாக உதயமானவர் நடிகர் எம்.ஜி.ஆர்தான். அதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் புரட்சியாளராகவே மட்டுமே நடிக்கும் வழக்கம் இல்லை. அனைத்து கதாபாத்திரங்களிலுமே ஒரு நடிகர் நடிப்பார் என்பதாகதான் சினிமா இருந்தது.
எம்.ஜி.ஆர் இப்படி ஒரு விஷயத்தை கொண்டு வந்த பின்னர் அவரை பின்பற்றி அடுத்து வந்த நடிகர்களும் கூட திரையில் அநீதிக்கு எதிராக கதாநாயகர்களாகவே தோன்ற துவங்கினர். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே வழிமுறையை பின்பற்றி மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த்.
எம்.ஜி.ஆர் தனது படத்தின் பாடல்களில் நிறைய கருத்து பாடல்களை வைப்பார். ஆனால் ரஜினி தனது படத்தின் முதல் பாடலை மட்டும் கருத்து பாடலாக வைத்தார். முத்து,அருணாச்சலம்,அண்ணாமலை என பல படங்களில் அதை பார்க்கலாம்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு சென்ற பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். அந்த சமயத்தில்தான் ரஜினிகாந்த் வளர்ந்து வந்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் ரஜினிக்கு அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த படத்தை முதலில் அன்புள்ள எம்.ஜி.ஆர் என்கிற பெயரில் எம்.ஜி.ஆரை வைத்துதான் எடுக்க இருந்தார்கள். எம்.ஜி.ஆரின் திரைப்படத்தை பார்த்து அவர் மீது அன்பு கொள்ளும் மாற்று திறனாளி சிறுமியை எம்.ஜி.ஆரே நேரில் பார்த்து அவருக்கு இருக்கும் தீராத நோயில் இருந்து அவரை காப்பதாக கதை எழுதப்பட்டது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு போய்விட்டார். இப்போதைய தலைமுறையினர் ரஜினிகாந்தைதான் பெரிதும் விரும்புகின்றனர் எனவே ரஜினியை வைத்து அந்த படத்தை எடுப்போம் என கூறினார். அதன்படி ரஜினியை வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது.
ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்திருந்தால் இந்த படம் இன்னமுமே சிறப்பாக இருந்திருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.