Rajinikanth ilayaraja: தமிழ் சினிமாவில் நடிப்பில் எப்படி ரஜினிகாந்த் பெரிய புள்ளியோ அதே போல இசையமைப்பதில் பெரிய புள்ளியாக இருந்தவர் இளையராஜா. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து வளர துவங்கிய அதே காலகட்டத்தில்தான் இளையராஜாவும் சினிமாவில் வளர தொடங்கினார்.
எனவே ரஜினியின் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் ஆனாலும் கூட சில காலகட்டங்களுக்கு பிறகு ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைப்பதை முற்றிலும் தவிர்த்தார் இளையராஜா. இளையராஜா தவிர்த்தாரா அல்லது ரஜினி இளையராஜாவை தவிர்த்தாரா என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது.
ஆனால் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுதான் இப்படியான ஒரு பிரிவை ஏற்படுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதே போல வைரமுத்து விற்கும் இளையராஜாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டதால் அதன் பிறகு இளையராஜா இசை அமைக்கும் பாடல்களுக்கு வைரமுத்து பாடல் வரிகளே எழுதவில்லை.
இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா பிரபலமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது உழைப்பாளி திரைப்படம் தான் இளையராஜா ரஜினிகாந்திற்கு இசையமைத்த கடைசி திரைப்படம் என கூறுகிறார்.
அந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் போது இளையராஜா கொஞ்சம் வேலையாக இருந்த காரணத்தினால் அவரது மகன் கார்த்திக் ராஜாவிடம் அந்த திரைப்படத்திற்கான இசையை அமைக்க சொல்லியிருந்தார் கார்த்திக் ராஜா.
அமைத்த இசையும் படத்தில் பெரும் வெற்றியைதான் கொடுத்தது என்றாலும் கூட ரஜினிகாந்தும் படத்தின் இயக்குனரும் இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். தனது மகனை இப்படி மட்டம் தட்டி பேசியது இளையராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அதன் பிறகு அவரே ரஜினி படங்களிலிருந்து விலகி இருக்கிறார் அதனால்தான் அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திற்கும் இளையராஜா ரஜினிக்கு இசையமைக்க வில்லை.