ரிலீஸ்க்கு தயாராகும் ரஜினியின் அடுத்த படம்..! ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வேலைகள்.!
ரஜினிகாந்த் தமிழில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அதனாலேயே எவ்வளவுதான் புது நடிகர்கள் சினிமாவிற்குள் வந்தாலும் கூட அவர்களால் நடிகர் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்கவே முடியவில்லை.
வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து டப்பிங் மற்றும் அதற்கடுத்த வேலைகள் எல்லாம் சென்று கொண்டுள்ளன.
அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் 2 திரைப்படம் குறித்தும் கூட அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் பெரும் தோல்வியை கண்ட படமாக கோச்சடையான் திரைப்படம் இருந்தது.
கோச்சடையான் திரைப்படத்தில் அனிமேஷன் தொழில்நுட்பம் ஒழுங்காக பயன்படுத்த படாமல் இருந்ததே இதற்கு காரணமாக இருந்தது. இந்த நிலையில் கோச்சடையான் திரைப்படத்தை மறு வெளியீடு செய்வதற்கான திட்டங்கள் நடந்து வருகிறதாம்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட காட்சிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி படத்தை வெளியிட இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.