பாட்ஷா படம் எல்லோருக்கும் பிடிக்க இதுதான் காரணம்… இப்ப உள்ள ஹீரோக்கள் கத்துக்கணும்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ரஜினிகாந்த்!..

தமிழில் உள்ள மாஸ் கதாநாயகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் படங்களாக நடிப்பதாலேயே ரஜினிகாந்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

இப்போது வரை அவரது படத்திற்கு இருக்கும் வரவேற்பு குறையவே இல்லை என்றே கூறலாம். அதற்கு ஜெயிலர் படமே ஒரு உதாரணம் ஆகும். இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த படங்களில் முக்கியமான படமாக பாட்ஷா திரைப்படம் பார்க்கப்படுகிறது.

இப்போதும் தொலைக்காட்சிகளில் அந்த படத்தை போட்டால் மக்கள் உடனே படத்தை பார்க்க அமர்ந்துவிடுவதுண்டு. பழைய நேர்க்காணல் ஒன்றில் இதுக்குறித்து நடிகர் விவேக் ரஜினியிடம் கேள்விகள் கேட்டார். அப்போது அவர் கூறும்போது ஏன் உங்கள் படங்களிலேயே பாட்ஷா திரைப்படத்திற்கு மட்டும் இவ்வளவு வரவேற்பு என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எப்போதும் ஒரு கதாநாயகனுக்காக கதையை எழுதக்கூடாது. கதையை எழுதும்போதே அதில் அந்த கதாபாத்திரம் பயங்கர கெத்தான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு பாட்ஷா திரைப்படத்தில் பாட்ஷா என்கிற அந்த கதாபாத்திரம் ஒரு சிறப்பான ஆக்‌ஷன் கதாபாத்திரம். அதில் நான் நடிக்கும்போது அது இன்னமும் சிறப்பாக மாறிவிட்டது.

ஆனால் இப்போதைய தலைமுறையினர் அது புரியாமல் கதாநாயகனுக்காக கதையை எழுதுகிறார்கள் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.