News
நெல்சன விடுறதா இல்ல.. ஓகே சொன்ன ரஜினி! – தலைவர் 169 அப்டேட்!
ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் குழப்பம் எழுந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்திற்கும் நெல்சன்தான் இயக்குனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது பீஸ்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது குறித்து சன் பிக்சர்ஸ் யோசனையில் உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்த முடிவை ரஜினியே எடுக்கட்டும் என்று அவரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
