முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ராம்கி. ராம்கியை பொருத்தவரை அப்பொழுது இருந்து இப்பொழுது வரை ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலை பயன்படுத்தும் ஒரு நடிகராக இருக்கிறார்.
இவர் நடித்த இணைந்த கைகள் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அப்பொழுது அதிகமாக பேசப்பட்டது. பிறகு சினிமாவில் நடிகர்கள் மாறிவந்த காலகட்டங்களில் ராம்கிக்கும் வாய்ப்புகள் குறைந்தது.
அதற்கு பிறகு பெரிதாக நடிகர் ராம்கிக்கு யாருமே வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இடையில் மாசாணி என்கிற திரைப்படத்தில் மட்டும் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால் வளர்ந்து வரும் இயக்குனர்கள் யாருமே கூட ராம்கிக்கு வாய்ப்புகள் தராமல் இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
லக்கி பாஸ்கர் கொடுத்த வெற்றி:
நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கூட அதிகமான வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தான் வருவார் என்றாலும் கூட ராம்கியின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தது.
அதனால் ராம்கிக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. இந்த நிலையில் லக்கி பாஸ்கர் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது உலகம் முழுவதும் தற்சமயம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது லக்கி பாஸ்கர் திரைப்படம்.
பாகிஸ்தான் தேசத்தில் கூட இந்த படத்திற்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். அது எனக்கு அதிசயமாக இருந்தது. உலக அளவில் நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் லக்கி பாஸ்கர் திரைப்படம் இருக்கிறது என்று வியப்புடன் கூடியிருக்கிறார் ராம்கி.
மேலும் இப்படியான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.