வியாபாரம் ஆகாததால் தள்ளி போன ரவி மோகன் படம்.. இப்படி ஒரு பிரச்சனையா? படத்துக்கு.!

நடிகர் ரவி மோகன் இப்பொழுது கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்சமயம் ஏற்கனவே பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன்.

இந்த நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியாக இருந்த திரைப்படம் கராத்தே பாபு. கராத்தே பாபு திரைப்படம் அரசியல் சார்ந்த திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று கூட வெளியாகி இருந்தது 

அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. இந்த வருடம் வெளியாக இருந்த கராத்தே பாபு திரைப்படம் அடுத்த வருடத்திற்கு தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது இன்னும் படத்திற்கு தேவையான சில காட்சிகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Social Media Bar

ஏற்கனவே ஜெயம் ரவி அதிக பிசியாக இருக்கும் காரணத்தினால் அவர் இயக்குனருக்கு கால் ஷீட் தாமதமாகதான் தருவதாக கூறியிருக்கிறார் அதனால் தான் படம் தாமதமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் படத்திற்கான ஓடிடி விற்பனை போன்றவை இன்னும் ஆகவில்லை எனவே ஓடிடி விற்பனை முடிந்த பிறகு தான் படம் ரிலீஸ் குறித்து யோசிக்கப்படும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.