Latest News
கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ ஆப்களில் புதிய மாற்றங்கள்..! ஆர்.பி.ஐ அமல்படுத்திய விதிமுறைகள்.!
வங்கி பரிவர்த்தனைகள் என்பது முன்பை விட இப்பொழுது இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. அதிலும் யுபிஐ என்கிற முறை வந்தது முதலே மொபைல் போன் மூலம் மின்சார கட்டணத்தில் இருந்து ரயில்வே டிக்கெட் வரை அனைத்தும் புக் செய்து கொள்ள முடியும் என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
மொத்த வங்கி சேவைகளும் இப்பொழுது ஒவ்வொரு நபரின் கைபேசியிலேயே அடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த யுபிஐ ஆப்களுக்கு நிறைய புதிய அம்சங்களையும் விதிமுறைகளையும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது ஆர்.பி.ஐ.
இந்த நிலையில் நவம்பர் 1 முதல் நிறைய புது விதிமுறைகளை ஆர்பிஐ அறிவித்திருக்கிறது. அதன்படி யுபிஐ அம்சத்திலும் இரண்டு புதிய அம்சங்களை சேர்த்து இருக்கிறது ஆர்பிஐ.
புதிய அம்சங்கள்
upi-யில் யுபிஐ லைட் என்கிற ஒரு விஷயம் அமல்படுத்தப்பட்டது அதன்படி பொதுவாக யூபிஐ முறையில் பணம் அனுப்புபவர்கள் 4 அல்லது 6 .இலக்க ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி தான் அனுப்புவார்கள் ஆனால் யுபிஐ லைட்டில் அப்படி அனுப்ப தேவையில்லை.
எந்தவித ரகசிய குறியீட்டு எண்ணும் இல்லாமலே எளிதாக அதில் பணம் அனுப்ப முடியும். இந்த யுபிஐ லைட் அம்சத்தில் புதிதாக மேலும் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி ஆரம்பத்தில் அதிகபட்சமாக 500 ரூபாய் தான் ரகசிய குறியீட்டு எண் இல்லாமல் அனுப்ப முடியும் என்று இருந்தது.
இப்பொழுது அதை ஆயிரம் ரூபாயாக மாற்றி இருக்கின்றனர் மேலும் upi லைட்டில் ஆட்டோ டெபாசிட் என்கிற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து இருக்கின்றனர்.