என் வாழ்க்கையில் பண்ணுன ரெண்டு பெரிய தப்பு… ஓப்பனாக கூறிய ஆர்.ஜே பாலாஜி.!

ஒரு சாதாரண ரேடியோ ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் மிக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி நன்றாக நகைச்சுவையாக பேச தெரியும். ஆரம்பத்தில் ரேடியோக்களில் காமெடியாக பேசி வந்த ஆர்.ஜே பாலாஜி க்ராஷ் டாக் என்கிற நிகழ்ச்சியின் வழியாக பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்துதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியனாகவே இருந்து விடாமல் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக இவர் பிரபலமடைந்தார். இவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படத்தில் துவங்கி பல திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஆரம்பக்காலக்கட்டங்களில் அவர் செய்த தவறுகளை வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி. அதில் அவர் கூறும்போது நான் ஒருமுறை சிவகார்த்திகேயன் பேசும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.

அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது அவர் மனம் உடைந்து அழுது பேசியிருந்தார். அப்போது மேடையில் நான் அதை கலாய்த்து பேசிவிட்டேன். பிறகு அதை டிவியில் பார்க்கும்போதே எனக்கு குற்ற உணர்ச்சியாக தோன்றியது.

rj balaji
rj balaji
Social Media Bar

நான் அப்படி செய்திருக்க கூடாது. அதே போல எனது சினிமா வாழ்க்கைக்கு தொடர்பில்லாத ஒரு விஷயத்தையும் செய்தேன். பண மதிப்பிழப்பு நடந்தப்போது எனக்கு அதுக்குறித்து பெரிதாக தெரியவில்லை. நான் அது சரியென்றே நினைத்தேன். எனவே அதற்கு ஆதரவாக நான் பேசினேன்.

ஆனால் பிறகுதான் அது தவறு என்பதை நான் கண்டறிந்தேன். என தனது தவறுகள் குறித்து கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.