அமைச்சருடன் உறவு உண்மையா?. தாயை மிஞ்சிய மகள்!.. மீனாவின் ரகசியத்தை கூறிய பிரபலம்!.

Meena: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருபவர் தான் மீனா. இவரின் நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. மேலும் மீனா அப்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருந்த மீனா, அதன் பிறகு சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். இதன் மூலம் சின்ன திரையிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தன்னுடைய சினிமா பயணத்தை சிறு வயதில் தொடங்கிய மீனா, 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் அவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் மலையாள படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய திரை வாழ்க்கை பயணத்தை மீனா ஆரம்பித்தார்.

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் இவர் விஜயுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கும் நடனம் ஆடி இருக்கிறார். அந்த பாடல் தமிழகத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

தாயை மிஞ்சிய மகள்

மீனா எவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாரோ, அதேபோல மீனாவின் மகளான நைனிகாவும் நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் அவரின் மகளாக நடித்திருக்கிறார்.

மகளின் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மீனா, நடிகர் விஜய்காக அந்த படத்தில் நைனிகாவை நடிக்க ஒப்பந்தம் செய்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் நைனிகாவின் படிப்பு முடிந்த பிறகு அவரும் சினிமா துறையில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சருடன் உறவு

கொரோனாவின் போது ஊரடங்கு காலத்தில் மீனாவின் கணவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் இறந்து விட்டார். இதனால் மீனாவின் இரண்டாவது திருமணத்தை பற்றி அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன.

ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக மீனாவும் பல பதிவுகளை பதிவிட்டு பதில் அளித்தும் வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் கே எல் முருகனுக்கும், மீனாவிற்கும் உறவு குறித்த சந்தேகங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மீனா தன்னுடைய தோழியான மாஸ்டர் கலாவுடன் பொங்கல் கொண்டாட்டங்களைஇ எல் முருகனோடு டெல்லியில் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என பல ஊடகங்களும் பல வகையான கிசுகிசுக்களை தெரிவித்து வந்தது. இதனைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் அவரின் கருத்தை தெரிவித்திருந்தார்.

ரங்கநாதன் தெரிவிக்கும் பொழுது அமைச்சரின் அழைப்பை ஏற்று கலா மாஸ்டர் சென்றிருக்கலாம். மேலும் அவருடன் மீனாவும் உடன் சென்று இருக்கலாம். இதில் எந்த ஒரு தவறும் இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார். இவ்வாறாக நடிகை மீனாவை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது