இதெல்லாம் எந்த கலைஞனும் பண்ண மாட்டான் சார்!.. விஜயகாந்த் குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் சொன்ன விஷயம்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கும் பெரும்பாலான படங்களில் அப்போது நடிகர் விஜயகாந்த் நாயகனாக நடித்து வந்தார்.

எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒன்றாக சினிமாவில் வளர்ந்து வருகிறார்களோ அதே போல தமிழ் சினிமாவில் ஒன்றாக வளர்ந்து வந்தவர்கள்தான் விஜயகாந்தும், எஸ்.ஏ சந்திரசேகரும். விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் படங்கள் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

இந்த நிலையில்தான் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர். எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படம் விஜயகாந்த் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது.

vijayakanth

அதனை தொடர்ந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது விஜயகாந்த் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர். விஜயகாந்திடம் ட்ரைவராக வேலை பார்த்து வந்தவர் எஸ்.கே சுப்பையா.

அவருக்கு சினிமாவில் தயாரிப்பாளராக ஆசை இருந்தது. இதை அறிந்த விஜயகாந்த் எஸ்.ஏ சந்திரசேகரிடம் பேசி அவரது இயக்கத்தில் சுப்பையா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் காசே வாங்கவில்லை.

இந்த விஷயத்தை கூறும் எஸ்.ஏ சந்திரசேகர் இதெல்லாம் தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும் செய்திருக்க மாட்டார்கள் என கூறுகிறார்.