வாரிசு நடிகருக்கு மனைவியாகும் சாய் பல்லவி.. இனிமே கைல பிடிக்க முடியாது போல..!
நடிகை சாய்பல்லவி தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே வாய்ப்பை பெற்று நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். முதன் முதலாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை நடித்து வந்தார் சாய் பல்லவி.
மற்ற சினிமாவுடன் ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் சாய் பல்லவி. ஆனால் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
அடுத்ததாக பாலிவுட்டில் பெரும்பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது.
நடிகர் அமீர்கானின் மகன் நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து அவர் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் அவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய்பல்லவி.
அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என பேச்சுக்கள் இருக்கின்றன.