பார்ட் 2 எடுக்குறேன்னு படத்தை கெடுக்க கூடாது.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர் சந்தானபாரதி..!
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் மிக பிரபலமானவர் சந்தான பாரதி. சந்தான பாரதி இயக்கிய குணா திரைப்படம் இப்பொழுது வரை மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கிறது.
கமல் படங்களில் தொடர்ந்து வாய்ப்பை பெற்ற நடித்து வந்தவராக சந்தான பாரதி இருக்கிறார். இந்தியன் 2 படத்திற்கு முன்பு கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படத்திலும் கூட சந்தான பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சந்தானபாரதியின் பதில்:
இந்த நிலையில் சமீபத்தில் சந்தான பாரதியை சந்தித்த பத்திரிகையாளர்கள் குணா திரைப்படம் இன்னமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தால் என்ன எனக் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சந்தான பாரதி அந்த திரைப்படத்தை இப்போது இரண்டாம் பாகமெல்லாம் எடுக்க முடியாது. அப்போது நடித்த நடிகர் நடிகையெல்லாம் இப்போது இருக்க வேண்டும்.
அதை தாண்டி ஒரு திரைப்படம் ஒரு காலகட்டத்தில் நல்ல கிளாஸுக்காக இருந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அதை இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என்று கூறி கெடுத்து விட கூடாது என்று கூறியிருக்கிறார் சந்தான பாரதி. மிக நேரடியாகவே இயக்குனர் சங்கரை தான் விமர்சித்து இருக்கிறார் சந்தான பாரதி என்று இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.