செம பவர்ஃபுல் கதை.. சான்ஸே இல்ல..! – சரத்குமாரை மிரள வைத்த தளபதி 66!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Beast-3

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் “தளபதி66” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். உடன் சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 66 குறித்து பேசியுள்ள நடிகர் சரத்குமார் “ஆகஸ்ட் மாதம் வரை தளபதி 66 படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. அனைத்து வகையான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும்படி இந்த படம் இருக்கும்” என கூறியுள்ளார்.

Refresh