புரூஸ் லீ சாவுக்கு பின்னாடி இப்படி ஒரு அரசியல் இருக்கு!.. வெளிப்படுத்திய பிரபலம்!.

ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாகவே ஹாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியவர் சண்டை மாஸ்டர் புரூஸ்லீ. பெரும்பாலும் புரூஸ் லீ நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அட்டக்காசமான சண்டை காட்சிகள் இருக்கும்.

அதற்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள். புரூஸ்லீ  உண்மையிலேயே சண்டை மாஸ்டராக இருந்தவர் என்பதும் அதற்கு காரணம். புரூஸ்லீ கதாநாயகனாக நடித்தப்போது அவருக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருந்து வந்தனர்.

புரூஸ்லீக்கு வந்த வரவேற்பு:

தமிழில் நடிகர் அர்ஜுன் கூட புரூஸ்லீயின் பெரும் ரசிகர் ஆவார்.  அவரது சண்டைகள் ஆரம்பத்தில் அடிப்படையில் புரூஸ்லீயின் சண்டைகளோடு ஒத்து இருந்தன. அந்த அளவிற்கு புரூஸ்லீக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் புரூஸ்லீ. மிக சீக்கிரமாகவே புரூஸ்லீ பிரபலமடைந்த நடிகராக மாறினார். வெறும் 5 படங்களில் நடித்து எந்த ஒரு நடிகரும் இவரை போல உலக அளவில் பிரபலமடையவில்லை.

இதனால்தான் புரூஸ்லீ கொல்லப்பட்டார் என ஒருப்பக்கம் பேச்சுக்கள் உண்டு. அதே போல புரூஸ்லீயின் சொந்த மனைவியே அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக ஒரு பேச்சு உண்டு.

சாவுக்கு பின்னால் உள்ள காரணம்:

உண்மையில் புரூஸ்லீயின் சாவுக்கு வேறு காரணங்கள் உண்டு என்று இதுக்குறித்து வேறு ஒரு பேச்சும் உண்டு. அரசியல் ரீதியான இந்த காரணம் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படும் காரணமாகவும் இருக்கிறது.

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருந்து வந்தன. இரண்டுமே எதிரி நாடுகளாக இருந்து வந்தன. இந்த நிலையில்தான் ஜப்பானில் ஹீரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகளை வீசி போரில் பதை பதைக்க வைத்தது அமெரிக்கா.

அந்த அளவிற்கு இரண்டு நாடுகளுக்கு இடையே உண்டான பிறகுதான் ஜப்பானியரான புரூஸ்லீ ஹாலிவுட்டில் சென்று வாய்ப்புகளை பெற்றார். புரூஸ்லீயின் சண்டை திறனுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் அவர் படங்களில் வெள்ளையர்களையும் கருப்பர்களையும் அடித்து நொருக்குவதை மக்கள் ரசித்தனர்.

ஒரு ஜப்பானியன் வெள்ளையர்களை அடிப்பதை ஆளும் வெள்ளையர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதே போல ஜப்பானிய தற்காப்பு கலையான குங்ஃபூவிற்கும் ஹாலிவுட்டில் வரவேற்பு கிடைத்தது.

இதனால் கோபமான மேல்மட்ட குடியினர் புரூஸ்லீயை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது.