இதே மாறி நடந்திருந்தா பொளார்னு வச்சிருப்பாங்க!.. ஷாலின் சோயாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Shaalin Zoya

Shaalin Zoya: தற்போது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஷாலின் சோயா போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

இவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ள நிலையில், இவரை வெறுப்பவர்களும் சிலர் உள்ளார்கள். அந்த வகையில் இவர் பேசுவதை கிண்டல் செய்தும் இவருக்கு மரியாதை தெரியாதா? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

இத்தனை எபிசோடுகள் முடிவடைந்த நிலையிலும், சோயா தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்காமல் நடிக்கிறார் எனவும் கூறி வருகிறார்கள். அவரைப் பற்றி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது தற்பொழுது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி ஷாலின் சோயா

குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் ஷாலின் சோயா போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இதில் அவரே தனக்கு சமைக்க தெரியாது எனவும் தன்னுடன் கோமாளியாக வரும் நபர்கள் தான் தனக்கு உதவி செய்வதாகவும் அவரே தெரிவித்திருக்கிறார். மேலும் மற்ற போட்டியாளர்கள் வெளியேறும் பொழுது, சமைக்க தெரியாத ஷாலின் சோயாவை வைத்துக்கொண்டு நல்லா சமைக்கும் மற்ற போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

Shaalin Zoya

இந்நிலையில் அவர் மற்ற கோமாளிகளை பேசும் விதமும், முக்கியமாக நடுவர்களை பேசும் விதமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய ஷாலின் சோயா

இவரின் காதலர் TTF வாசன் தான் சர்ச்சையில் மாட்டி வருகிறார் என்று பார்த்தால் இவரையும் சமூக வலைத்தளங்களில் நெடிசன்கள் வைத்து செய்கிறார்கள். ஏனென்றால் குக் வித் கோமாளி சீசன் 5-ல், கடந்த வாரம் நடந்து முடிந்த எபிசோடு ஒன்றில் சோயா செய்த சம்பவம் தான் இதற்குக் காரணம்.

இதில் கோமாளிகளாக வந்த பலரும் தங்களுக்குகென்று கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று வந்திருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இதில் கோமாளியாக சரத் கலந்து கொண்டிருந்தார்.

ஷாலின் சோயா சமைத்த உணவை விளையாட்டாக மற்ற கோமாளிகள் மறைத்து வைக்க அதை தேடிக் கொண்டிருந்த சோயா, கடைசியில் அழுது புலம்பினார். அப்பொழுது ஷாலின் சோயா விளையாட்டாக சரத்தின் உடையை தூக்கிப் பார்க்க, அது அங்கிருந்து அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அப்பொழுது நடுவராக மாதம் பட்டி ரங்கராஜனும் உடனிருந்து சிரித்தார்.

இந்த சம்பவம் தான் தற்பொழுது பேசுபொருளாக சமூக வலைத்தளங்களில் உள்ளது. ஷாலின் சோயா செய்ததால் அனைவரும் சிரிக்கிறார்கள். இதுவே ஒரு பையன் ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டிருந்தால் அங்கு சிரித்திருப்பார்களா? ஒரு அறை விட்டிருக்கமாட்டார்கள். அப்போ பெண் என்றால் ஒரு நியாயம். ஆண் என்றால் ஒரு நியாயமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.