சில அறிவில்லாத முட்டாள்கள் கேப்டனை பத்தி இப்படியெல்லாம் பேசுறாங்க!.. நெட்டிசன்களால் கடுப்பான இயக்குனர் ஆர்.கே செல்வமணி!.

MGR rk selvamani

Director RK Selvamani : தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் பலருக்கும் சினிமாவில் முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். இளமை காலங்களில் படம் நடிக்கும் பொழுது ஊமை விழிகள் என்கிற திரைப்படம் அவரது மொத்த சினிமா வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதுவரை அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்குதான் திறமை அதிகமாக இருக்கும் என்று நினைத்த விஜயகாந்திற்கு ஆபாவாணனின் ஊமை விழிகள் அவரது கருத்தை மாற்றி போடும் விஷயமாக அமைந்தது. ஊமை விழிகள் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார் விஜயகாந்த்.

இதனால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் முதலில் வந்து கதை சொல்வது விஜயகாந்த்திடம்தான் என இருந்தது. அப்படி விஜயகாந்த்திடம் கதை சொல்லி தனது முதல் படத்திலேயே பெரும் ஹிட்டு கொடுத்தவர் ஆர்.கே செல்வமணி.

Vijayakanth
Vijayakanth

ஆர் கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் தமிழில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். மும்பையில் ஒரு தீவில் ஹாஸ்பிடல் வைத்து நடத்தும் சரத்குமார் அதன் மூலமாக உடல் உறுப்புகளை திருடி விற்கும் ஒரு வேலையையும் செய்து வருகிறார். இதனை கண்டறியும் ஒரு டாக்டர் மூலமாக இந்த விஷயம் விஜயகாந்திற்கு வர அதை விஜயகாந்த் புலன் விசாரணை செய்வதே கதையாக இருக்கும்.

அதனை தொடர்ந்து விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தையும் ஆர்.கே செல்வமணிதான் இயக்கினார். இதனால் ஆர்.கே செல்வமணிக்கும் விஜயகாந்த்திற்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்து வந்தது. தற்சமயம் விஜயகாந்தின் இறப்பு நடந்தது. இது குறித்து பேசும் ஆர்.கே செல்வமணி கூறும் பொழுது கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் படபிடிப்பில் எக்கச்சக்கமான விபத்துகள் கேப்டனுக்கு ஏற்பட்டன.

pulan visaranai
pulan visaranai

அதில் விஜயகாந்திற்கு ஏகப்பட்ட அடிபட்டது இப்படி ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்பொழுது அவருக்கு நிறைய உடலில் அடிபட்டு இருந்தது. இதன் காரணமாகத்தான் அவரது இறப்பு இவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்ந்துள்ளது. இது தெரியாத சில அறிவில்லாத முட்டாள்கள் கேப்டனை பற்றி தவறாக நிறைய பேசுகிறார்கள் ஆனால் அவருடன் பயணித்தவர்களுக்குதான் அவர் சினிமாவில் நடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும் என கூறியுள்ளார் ஆர்.கே செல்வமணி.