என்ன வளர்த்து விட்டவர் வாலி – சிம்புவுக்கும் வாலிக்கும் இருந்த உறவை பற்றி தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன், வைரமுத்துவை போலவே தமிழ் சினிமாவி மற்றுமொரு பிரபலமான கவிஞர் வாலி. பல பட பாடல்களுக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார். நடிகர் சிம்புவிற்கும் வாலிக்கும் இடையே பல காலங்களாக நல்ல உறவு இருந்து வருகிறது.

ஆரம்பக்கட்டத்தில் சிம்பு நடித்த திரைப்படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதி தந்துள்ளார். ஒரு பேட்டியில் வாலி சிம்புவை குறித்து பேசினார். லூசு பெண்ணே பாடலில் “வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே” என பாடியிருப்பார். அப்போது வாலிக்கு ஒரு ஐயம் வந்ததாம். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் ஒரு பாடலாசிரியர் ஆவார்.

அவரும் நிறைய பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். எனவே தந்தையின் பெயரை குறிப்பிடாமல் எனது பெயரை குறிப்பிடுகிறாரே என யோசித்த வாலி இந்த விஷயத்தை சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு சிம்பு தனது தந்தையே இந்த வரிதான் சரி என கூறியதாக கூறினார்.

அதே போல ஒரு மேடை நிகழ்ச்சியில் சிம்பு பேசும்பொழுது “நான் சினிமா வந்த காலங்கள் துவங்கியே நான் வளர வேண்டும் என எனக்காக பாடல் வரிகள் எழுதியவர் வாலி” என கூறியுள்ளார். இருவருக்கும் அப்படி ஒரு ஆழமான நட்பு இருந்துள்ளது.

Refresh