News
ஆக்ஷன் போதும்.. லவ் மூடில் சிம்பு! த்ரிஷா ஓ.கே சொன்னா போதும்?
வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

அடுத்ததாக சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ ரிலீஸுக்காக காத்திருக்கிறதாம். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு அடுத்து 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிம்பு.
அதன்படி அடுத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ தயாராகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான கதையை உடனடியாக தயார் செய்ய முடியாது, அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேனன்.
அதனால் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் வெற்றி பெற்ற விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை எழுந்துள்ளதாம். தற்போது பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து த்ரிஷாவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. சிம்புவும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக செய்து வரும் நிலையில் ஒரு மாற்றமாக ஒரு காதல் கதை நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து உள்ளது.
விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு அப்போது முதலே ரசிகர்கள் நிறைய உள்ளதால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
