இந்த குக் வித் கோமாளியிலும் சிவாங்கி உண்டு!  –  மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் பிக் பாஸை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என கூறலாம். குக் வித் கோமாளி முதல் சீசன் துவங்கியது முதலே மணிமேகலை, பாலா, சிவாங்கி மூவரும் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

முதல் சீசன் வெகுவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன் இரண்டாவது சீசன் முதல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குக் வித் கோமாளி. ஒரு சமையல்க்காரர் ஒரு கோமாளி என்பதே இதன் கான்செப்ட் ஆகும்.

சமையல் காரருக்கும் கோமாளிக்கும் நிறைய டாஸ்க் கொடுக்கப்படும். அதை அவர்கள் எப்படி சமாளித்து சமைக்கிறார்கள் என்பதாக இந்த நிகழ்ச்சி செல்லும். இதுவரை வெற்றிக்கரமாக மூன்று சீசன்களை முடித்துள்ள நிலையில் தற்சமயம் குக் வித் கோமாளியின் நான்காவது சீசன் வருகிற சனிக்கிழமை முதல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

இந்த முறை பல சுவாரஸ்யமான நபர்களை கோமளிகளாக இறக்கியுள்ளனர். ஜி.பி முத்து, மணிமேகலை, சுனிதா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், இன்னும் பலர் கலந்துக்கொள்கின்றனர். ஆனால் ப்ரோமோ வெளியிட்டபோதே அந்த லிஸ்ட்டில் சிவாங்கி இல்லை.

சிவாங்கிக்கு நடிக்க வாய்ப்புகள் வந்துக்கொண்டிருப்பதால் அவர் இந்த முறை குக் வித் கோமாளிக்கு வரவில்லை என கூறப்பட்டது. இதனால் சிவாங்கியின் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான குக் வித் கோமாளியி ப்ரோமோவில் சிவாங்கி வருவது ஒளிப்பரப்பானது. எனவே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சிவாங்கி வருவதை சர்ப்ரைஸாக வைத்திருந்து இப்போது காட்டுகிறார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் நாள் ஓப்பனிங் ஷோவுக்கும் மட்டும் கூட சிவாங்கி வந்திருக்கலாம் எனவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

Refresh