Cinema History
உன் படத்துல நான் நடிக்கிறதா இல்ல!- பாக்கியராஜின் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை இந்திய சினிமாவில் காண்பது அரிது என பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் பல படங்களில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அதில் முக்கியமான திரைப்படம் தாவணி கனவுகள். அந்த படத்தில் ஐந்து தங்கைகளை திருமணம் செய்து கொடுக்கும் பெரும் பொறுப்பை கொண்டிருக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார்.
டிகிரி படித்திருந்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார். அப்போது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக சிவாஜி இருப்பார். அந்த படத்தில் நீதிமன்றத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது.
அன்றைய தினம் சிவாஜி கணேசனும் படப்பிடிப்பிற்கு வந்தார். வந்தவர் நீதிமன்றத்தை பார்த்துவிட்டு அசந்துபோய் “டேய் பாக்கியராஜ் எப்படிடா இவ்ளோ சூப்பரா நீதிமன்றம் செட் போட்ட. நெசமான நீதிமன்றம் மாதிரியே இருக்குடா” என கூறியுள்ளார்.
உடனே பாக்கியராஜ் “சார் இது நிஜமான நீதிமன்றம்தான், படம் எடுக்குறதுக்காக பர்மிஷன் வாங்கி இருக்கேன்” என கூறியுள்ளார். உடனே மிகவும் கோபமாகிவிட்டார் சிவாஜி. நீதி மன்றத்திற்கு என ஒரு மரியாதை இருக்கு. அதை படம் எடுக்குறேன்னு கலங்கப்படுத்துறியா.. நான் இதுல நடிக்க மாட்டேன், எனக் கூறி கிளம்பிவிட்டார்.
பிறகு அவரை சமாதானப்படுத்திதான் ஒரு வழியாக அந்த காட்சியை படமாக்கி உள்ளனர். சட்டம் தொடர்பான விஷயங்களில் அந்த அளவிற்கு மரியாதையுடன் நடந்து கொண்டுள்ளார் சிவாஜி என ஒரு பேட்டியில் பாக்கியராஜ் கூறியுள்ளார்.