Cinema History
அந்த சீனுக்கு ஒவ்வொரு பொண்ண பெத்த தகப்பனும் அழணும்!.. மிஸ்கின் படத்தில் நடிகருக்கு வந்த சோதனை!..
சினிமாவில் பல காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கான ரசிக பட்டாளம் அவர்களுக்கு இருக்காது.
அப்படியான ஒரு சில நடிகர்களில் ஆடுகளம் நரேனும் முக்கியமானவர். அவரது இளமைக்காலம் முதலே தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து வந்தது. ஆடுகளம் திரைப்படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் கூட அதையும் சிறப்பாக நடித்து கொடுத்தார் நரேன்.
அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இந்த நிலையில் அஞ்சாதே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது ஒரு பெண்ணுக்கு அப்பா கதாபாத்திரத்தில் அஞ்சாதே திரைப்படத்தில் நடித்தேன்.
என் பெண்ணை கடத்திய கும்பல் ஒரு கைலியில் அவளை சுற்றி சாலையில் வீசியெறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள். அப்போது அவள் அருகில் நான் செல்ல வேண்டும் அதுதான் காட்சியாக இருந்தது. நான் அந்த காட்சியில் வேகமாக ஓடியப்போது மிஸ்கின் என்னை தடுத்து வேகமாக செல்ல வேண்டாம். மெதுவாக நடந்து வாருங்கள் என கூறினார்.
கதைப்படி என்னுடைய பெண் கற்பழிக்கப்பட்டு ரோட்டில் கிடக்கும்போது ஒரு தந்தையாக நான் எப்படி மெதுவாக நடந்து வர முடியும் என கேட்டேன். அதற்கு பதிலளித்த மிஸ்கின் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் 1 நிமிடத்திற்கும் அதிகமாக இந்த காட்சிக்காக ஒரு இசையை வைத்திருக்கிறேன். அது இல்லாமல் வில்லன் கொல்லப்பட போவதை நியாயப்படுத்தும் காட்சி. இதை பார்க்கும் ஒவ்வொரு தகப்பனும் அழ வேண்டும்.
அதற்கு தகுந்தாற்போல காட்சி எனக்கு வேண்டும் என கூறி படப்பிடிப்பை நிறுத்தி ஆடுகளம் நரேனுக்கு இசையை போட்டு காட்டியுள்ளார். அதை கேட்ட பிறகு மறு பேச்சு பேசாமல் அந்த காட்சியை மிஸ்கின் சொன்னது போலவே நடித்து கொடுத்துள்ளார் ஆடுகளம் நரேன்.