ராணுவ விதிமுறையை மீறிய அமரன் திரைப்படம்… அந்த விஷயம் உண்மைதானா?
தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக கிடைத்த வசூலை வைத்து திரைப்படங்களாக தயாரித்து வருகிறார். அப்படியாக தற்சமயம் அவர் தயாரித்து வரும் திரைப்படம்தான் அமரன்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற நிஜமான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது.
மேலும் இந்த படத்திற்காக நிஜமான ராணுவ தளங்களுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தி இருக்கின்றனர். ஆனால் மக்கள் இந்த திரைப்படத்தில் ஒரு குறை இருப்பதாக கூறி வருகின்றனர். அது என்னவென்றால் ராணுவத்தை பொருத்தவரை ராணுவத்தில் தாடியை பெரிதாக வளர்த்துக் கொள்வதற்கு அனுமதியே கிடையாது.
அமரன் படத்தில் உள்ள பிழை:
மீசை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். தாடி வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. அப்படி இருக்கும் பொழுது சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் தாடி வைத்திருப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது அது எப்படி சாத்தியமாகும்.
இது ராணுவ விதி முறையை மீறியது போன்ற செயலாகும் என்று சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் இதற்கு பதில் அளிக்கும் போது சில விளக்கங்களை கொடுத்திருந்தார். அதாவது பொதுவாக இராணுவ விதிமுறைகளின்படி தாடி வைத்துக் கொள்வது குற்றமாகும்.
ஆனால் அதிக குளிராக இருக்கும் பகுதிகளில் பகுதிகளில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் மட்டும் தாடி வைத்துக் கொள்ளலாம் ஏனெனில் அதிக குளிரான இடங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு தோல் மிகவும் சென்சிட்டிவாக மாறிவிடும்.
சின்னதாக காயம் பட்டால் கூட ரத்தம் வரும் அளவிற்கு மாறிவிடும் அந்த நிலையில் அவர்கள் பிளேடு போன்றவற்றை பயன்படுத்தி தங்கள் தாடியை ஷேவ் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது அவர்களது சருமத்தையும் பாதித்துவிடும். எனவே அவர்கள் அந்த இடங்களில் தாடியுடன்தான் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார் அந்த ராணுவ வீரர்கள்.