அது நார வாய்… இது வேற வாய்… பொது பேட்டிகளில் வாய் விட்டு அடி வாங்கிய பிரபலங்கள்
பிரபலங்கள் சில நேரங்களில் பேட்டிகளில் ஏதாவது வாய் விட்டு மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் என்பது சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படியாக பேட்டியில் வாய்விட்டு மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான சில பிரபலங்களை இப்பொழுது பார்க்க போகிறோம். அதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட பொழுது அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது யாரோ ஒருவர் உங்களை தூக்கி விட்டேன் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.
மேடையில் பேசி பிரச்சனை வந்த பிரபலங்கள்
அப்படி சொல்லிதான் என்னையும் பழக்கி வைத்து விட்டார்கள் என்று பேசி இருந்தார். இதன் மூலமாக நன்றி மறந்து விட்டார் சிவகார்த்திகேயன் என்று கூறி அவரை பலரும் திட்டி வந்தனர். அதற்குப் பிறகு அடுத்து ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்து விட்டவர்களை குறித்து பேசி அந்த பிரச்சனையை சரி செய்து இருந்தார்.
அதேபோலவே இதில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அஸ்வின் அஸ்வினை பொருத்தவரை அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற தனது முதல் திரைப்படத்தில் நடித்த பொழுதே அதன் ஆடியோ லான்ச் விழாவில் கலந்து கொண்ட அஸ்வின் சில சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார்.
முக்கியமாக தான் 30 கதைகளை கேட்டதாகவும் அந்த 30 கதைகளை கேட்டும் தூக்கம் வந்துவிட்டது இந்த ஒரு கதைக்கு தான் தூக்கம் வரவில்லை என்று அவர் கூறியது அதிக சர்ச்சையானது. இன்னும் அதிக படங்களில் நடிக்கவே இல்லை அதற்குள்ளவே இப்படி பேச துவங்கி விட்டாரே என்று அனைவரும் அதை சர்ச்சையாக்கினார்கள். அதற்குப் பிறகு அந்த விஷயம் குறித்து மன்னிப்பு கேட்டு இருந்தார் அஸ்வின்.