Connect with us

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை..! அமரன் பார்த்துட்டு வாய்ப்பு கொடுக்கும் மேலிடம்..!

amaran

News

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை..! அமரன் பார்த்துட்டு வாய்ப்பு கொடுக்கும் மேலிடம்..!

Social Media Bar

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்திற்காக மிகவும் போராடி இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி. எனவே இந்த படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது.

படத்தில் விஷயங்கள் அனைத்தும் உண்மையான ராணுவம் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளவாடங்களில் இதற்காக அனுமதி பெற்று படபிடிப்புகளை நடத்தி இருக்கின்றனர். அதேபோல படம் முழுக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்துமே உண்மையான ஆயுதம் என்று அவர்கள் பேட்டியில் கூறியிருக்கின்றனர்.

amaran

amaran

அமரனுக்கு கிடைத்த வரவேற்பு:

இதற்காக சரியாக பயிற்சி பெற்று ஆயுதத்தை பயன்படுத்தி இருக்கிறார் சிவக்கார்த்திகேயன். இந்த நிலையில் அமரன் திரைப்படம் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு காண்பிக்கப்பட்டது. அந்த திரைப்படத்தை பார்த்து அவர்கள் ஆடிப் போய் இருக்கின்றனர்.

ஏனெனில் படத்தில் உண்மையான ராணுவ வீரன் எப்படி இருப்பானோ அதேபோல சிவகார்த்திகேயன் இருப்பதை பார்த்திருக்கின்றனர். இதற்கு முன்பு எத்தனையோ ராணுவ வீரன் திரைப்படங்கள் வந்திருந்த போதிலும் ராணுவ வீரர்களை இவ்வளவு சரியாக காண்பித்தது கிடையாது.

இந்த நிலையில் இதுகுறித்து ஆர்மி வீரர்கள் சிவகார்த்திகேயனுடன் பேசும் பொழுது நீங்கள் தவறான இடத்தில் பணிபுரிந்து வருகிறீர்கள் நீங்கள் ஆர்மியில் வேலை செய்ய வேண்டியவர் என்று கூறி இருக்கின்றனர். அந்த அளவிற்கு அந்த படம் தத்துரூபமாக இருந்ததாக கூறப்படுகிறது மேலும் சிவகார்த்திகேயனே இந்த விஷயத்தை ஒரு நிகழ்வில் கூறியிருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top