தனுஷ் ஒன்னும் எனக்கு அவ்ளோ க்ளோஸ் கிடையாது? – அப்போதே கூறிய சிவகார்த்திகேயன்.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் வரிசையாக படங்கள் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு வாய்ப்பளித்தவர் நடிகர் தனுஷ்.

தனுஷ் நடித்த 3 திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு சில பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு தனுஷ் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் தயாரித்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிப்பதற்கு அழைத்தபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் தனுஷை விட்டு விலகிவிட்டார் என கூறப்படுகிறது. மான் கராத்தே திரைப்படம் வந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் தனுஷ் குறித்து பேசியிருந்தார். அதில் கூறும்போது சதிஷ் மற்றும் அனிரூத்தான் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

தனுஷ் அவ்வளவிற்கு நெருக்கமானவர் கிடையாது. என கூறியுள்ளார். அந்த சமயத்திலே கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி இருக்கலாம் என இதன் மூலம் அறிய முடிகிறது.

Refresh