News
க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங்னு சொல்றவங்களை இப்படிதான் டீல் பண்ணுவேன் – சிவாங்கியின் பதில்
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் சிவாங்கி.

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அவரது தனிப்பட்ட குழந்தை பாணியிலான ரியாக்ஷன்களே மக்களை வெகுவாக கவர்ந்தது என கூறலாம்.
அதிகமாக 2கே கிட்ஸ் இவருக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து இவருக்கு டான் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
அடிக்கடி பலரும் சிவாங்கியை கலாய்ப்பது உண்டு. அவரது ரியாக்ஷன்கள் செயற்கை தனமாக உள்ளது. க்ரிஞ்சாக நடிக்கிறார் என்றெல்லாம் கூறுவதுண்டு. எனவே சமூக வலைத்தளங்களில் ஒருவர் சிவாங்கியிடம் “உங்களை க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங் என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு சிவாங்கி ஒரு ரியாக்ஷனை பதிவிட்டுள்ளார்.”

