என் வாழ்நாள் கனவே இதுதான்? – பிரபல பாடகியை சந்தித்த சிவாங்கி!

சின்னத்திரையான விஜய் டிவி மூலம் பலர் தமிழ் சினிமாவிற்குள் வந்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவிற்கு வந்தவர்தான் சிவாங்கி.

2கே கிட்ஸ்களில் சிவாங்கிக்கு அதிகப்படியான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். பாடகியாக அறிமுகமான சிவாங்கி, பிறகு தனது தனிப்பட்ட நகைச்சுவை திறனால் மிகவும் பிரபலமானார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் கதாநாயகிக்கு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முக்கிய பாடகியான ஸ்ரேயா கோஷலை நேரில் சந்தித்துள்ளார் சிவாங்கி.

ஸ்ரேயா கோஷல் சினிமாவில் முக்கிய பாடகியாவார். இவர் பாலிவுட் சிங்கர் என்றாலும் கூட தமிழிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரேயா கோஷலை நேரில் சந்தித்த சிவாங்கி அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என சிவாங்கி அதை குறிப்பிட்டுள்ளார்.

Refresh