வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?.. திடுக்கிடும் தகவல்களை வழங்கும் இயற்கை ஆர்வலர்!.

தற்பொழுது மாறிவரும் காலநிலை மாற்றத்தால் இந்த பூமி பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கோடைகாலத்தில் மழை பெய்வதும், மழைக்காலத்தில் வெயில் அடிப்பதும், குளிர் காலத்தில் அதிக குளிர் ஏற்படுவதும் என சமீப காலங்களாக காலநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களிலும் சுனாமி, நிலச்சரிவு, அதிக மழை, அதிக வெப்பம் போன்ற பல காரணங்களால் பல உயிரிழப்புகள் நடக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் பல உயிர்கள் பலியாகியுள்ளது. இது தற்பொழுது உலகத்தையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தற்பொழுது சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வயநாடு நிலச்சரிவு

கேரளாவில் வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள பல கிராமங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு அழிந்து போயின.

கடந்த 30 ஆம் தேதி கேரளா வயநாட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இரவு நடைபெற்றது அந்த நிலச்சரிவு சம்பவம். இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அழிந்தன.

Wayanad landslides
Social Media Bar

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்கள். மீட்பு பணியினரும், ராணுவ குழுவும் சேர்ந்து நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் அதில் பல பேரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு மண்ணில் சிக்கியிருந்தது.

சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் கூறியது

அவர் கூறும் போது 48 மணி நேரத்தில் கேரளாவில் 572 மில்லி மீட்டர், அதாவது 57 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. ஆனால் கேரளா முதலமைச்சர் கூறும் போது, எங்களுக்கு கொடுத்தது ஆரஞ்ச் அலர்ட் தான். ஆரஞ்சு அலர்ட் என்றால் 20 செ.மீ-க்கும் குறைவாக தான் மழை பெய்யும் என கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியாவும், ஆப்பிரிக்காவும் ஒன்றாக இருந்து, அது பிளவுபடும் போது உருவான மலை தான் மேற்கு தொடர்ச்சி மலைகள். மேலும் பல இயற்கை இடர்பாடுகளை சந்தித்த இந்த மலை தற்பொழுது 57 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பது ஒன்றும் இந்த மலைக்கு பெரிய விஷயம் அல்ல. ஆனால் தற்பொழுது இந்த அளவு மழையை கூட தாங்க முடியாத அளவிற்கு அந்த மலையில் நடந்தது என்னவென்றால், அந்த மலைகளில் தேக்கு மரங்கள் அதிகம் இருந்திருக்கிறது. அதனை வெட்டி உள்ளார்கள். மலைப்பகுதியில் உள்ளிருக்கும் காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத பல விஷயங்கள் அங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை, பாறையின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீரை தாங்கி நிற்கக் கூடிய தன்மையை மண் இழந்து விடுகிறது. இதனால் தான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர் வெற்றிச்செல்வன் கூறியிருக்கிறார்.