Cinema History
10 நாள்ல படம் புடிக்கலைனா டைரக்டரை மாத்திடுவோம் – நிபந்தனையுடன் சினிமா வாழ்க்கையை துவங்கிய பிரபல இயக்குனர்.!
சினிமாவை பொறுத்தவரை தற்போதைய காலக்கட்டத்தை விட எம்.ஜி.ஆர் காலக்கட்டங்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
இப்போதும் பெரும் இயக்குனர்கள் நாம் வியந்து பார்க்கும் பலரும் முதல் படத்தை இயக்கவே கஷ்டபட்டிருப்பார்கள். அப்படியாக 1960 களில் பிரபலமாக இருந்த இயக்குனர்தான் ஸ்ரீதர்.
அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் இப்போது வரை பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாகும். மேலும் நடிகை ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் ஸ்ரீதர்தான். படம் இயக்குவதற்கு முன்பு ஸ்ரீதர் தயாரிப்பாளராக இருந்தார்.
வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். அப்போது வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கல்யாண பரிசு திரைப்படத்தை தயாரிக்க இருந்தனர். அந்த திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்குனராக இருந்து எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால் அவரது பங்குதாரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஸ்ரீதர் மிகவும் வற்புறுத்தவே ஒரு விதிமுறையின் அடைபடையில் படத்திற்கு தயாரிக்க வீனஸ் குழுவினர் ஒப்புக்கொண்டனர்.
அதன்படி ஸ்ரீதர் பத்து நாளைக்கு படத்தை இயக்கி அதை தயாரிப்பாளர்களிடம் காட்ட வேண்டும். அது திருப்தியாக இருக்கும் பட்சத்தில் அவர் தொடர்ந்து படம் இயக்கலாம். இல்லாத பட்சத்தில் வேறு இயக்குனரை நியமிக்க வேண்டும்.
ஸ்ரீதரும் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் 10 நாட்களுக்கு பிறகு படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோது தயாரிப்பாளர்களுக்கு அது மனநிறைவாக இருந்தது. எனவே அந்த படத்தை ஸ்ரீதரையே இயக்க சொல்லிவிட்டனர்.
அப்போது வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் கல்யாண பரிசு திரைப்படமும் முக்கிய படமாகும்.