விஷால் வீட்டில் கற்களை எறிந்த மர்ம நபர்கள் – நடந்தது என்ன?

தமிழில் முண்ணனி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஷால் இருக்கிறார். தற்சமயம் அவர் நடித்த லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வரவிருக்கிறது. அடுத்ததாக மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவரோடு நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று யாரோ ஒரு மர்ம நபர் நடிகர் விஷாலின் வீட்டில் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து விஷாலின் மேனாஜர் ஹரி கிருஷ்ணன் இதுக்குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். எனவே விஷால் வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் அந்த மர்ம நபர் ஒரு சிவப்பு நிற காரில் வந்திருப்பது தெரிந்தது. ஆனால் எதற்காக அவர் விஷால் வீட்டில் கல் எறிந்தார் என்பது இன்னும் தெரியவில்லை.

ஒருவேளை விஷாலுக்கு யாராவது தனிப்பட்ட எதிரிகள் இருப்பார்களோ? என பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. இந்நிலையில் காவல் துறை இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Refresh