Connect with us

தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட்! – புது பேட்டை இரண்டாம் பாகமா?

News

தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட்! – புது பேட்டை இரண்டாம் பாகமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகள் வைத்து ஆக்‌ஷன் படம் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் தனுஷ்.

முக்கியமாக சாதரண மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமான சண்டை காட்சிகள் இல்லாத படங்களில் நடித்து ஹிட் கொடுக்க கூடியவர் தனுஷ்.

இறுதியாக தனுஷ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்சமயம் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பள்ளி வாத்தியாராக இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளதால் இந்த படத்திற்கும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு தனுஷ் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்கிற கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட்களை வழங்கியுள்ளது. தனுஷின் 50 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அதன்படி இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருப்பது போல தெரிகிறது. எனவே இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என பேச்சுக்கள் அடிப்படுகின்றன. இதற்கிடையே இந்த படத்தை தனுஷ் இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

To Top