அம்மா செண்டிமெண்ட் கதைதான் அரண்மனை 4!.. கதையை வெளிப்படுத்திய சுந்தர் சி!.. இண்ட்ரஸ்டா இருக்கும் போலயே!.

தொடர்ந்து சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் பேய் படங்களில் முக்கியமான திரைப்படமாக அரண்மனை திரைப்படங்கள் இருந்து வருகின்றன. ஏற்கனவே 3 பாகங்கள் வெற்றி கொடுத்த நிலையில் தற்சமயம் நான்காம் பாகமும் வெளிவர இருக்கிறது.

அரண்மனை 4 படத்திற்கான ட்ரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுந்தர் சி பேசும்போது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது முதலில் படத்தில் விஜய் சேதுபதியைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தோம்.

aranmanai 4

அந்த சமயத்தில் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் நல்ல நட்பு உண்டானது. ஆனால் படத்திற்காக அவர் தேதி ஒதுக்குவதில் பிரச்சனை இருந்தது. அவருக்காக தேதியை மாற்றினால் அது மற்ற நடிகர்களின் தேதிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

எனவே விஜய் சேதுபதிக்கு பதிலாக நானே கதாநாயகனாக நடித்தேன் என்கிறார் சுந்தர் சி. மேலும் அவர் கூறும்போது மற்ற அரண்மனை திரைப்படத்தில் இருந்து இந்த படம் மாறுப்பட்டு இருக்கும் என கூறியுள்ளார். படத்தின் கதைப்படி ஒரு தாய்க்கும் கெட்ட சக்திக்கும் இடையே நடக்கும் கதையாக இந்த படம் இருக்கும்.

இதற்கு முந்தைய கதைகளில் பேய்க்கு நியாயமான ஒரு பின் கதை இருக்கும். அந்த கதையே இந்த திரைப்படத்தில் மாறுப்படும் என்கிறார் சுந்தர் சி.