கன்பார்ம் ஆகியது சூர்யாவின் அடுத்தப்படம் –  இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஜெய்பீம், விக்ரம் என சில ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. விக்ரம் திரைப்படமானது நடிகர் சூர்யாவிற்கு நல்ல வாய்ப்பை அளித்தது. உலகநாயகன் கமல்ஹாசனுக்கே வில்லனாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பு வந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் அடுத்து சூர்யா நடிக்கும் படமும் வரவேற்பை பெறவில்லை எனில் அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 

எனவே அடுத்து நடிக்க இருக்கும் படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் சூர்யா இருக்கிறார். இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்க போகும் படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளி வந்த அண்ணாத்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு படம் இல்லாததால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் அடுத்து சூர்யாவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது அவருக்கு சாதகமாக அமையுமா? என தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் சூர்யாவை உயர்த்திவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh