இயக்குனர் டி ராஜேந்திரன் ஒரு காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர். பெரும்பாலும் டி ராஜேந்திரன் இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
சோக கிளைமாக்ஸ் வைத்தாலும் கூட அவரது திரைப்படம் ஹிட் அளிக்கும் என்கிற நிலை உள்ளது. அதே காலக்கட்டத்தில் ரஜினி வளர்ந்து வந்த நடிகராக இருந்தார். ரஜினிக்கும் டி.ஆர் க்கும் அப்பொழுது நல்ல பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தற்சமயம் கூலி திரைப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களை குறித்து பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரஜினியிடம் பேசிய டி.ராஜேந்தர்:
அவர் கூறும் பொழுது ஒருமுறை ரஜினி ஒரு கடுமையான பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். அந்த பிரச்சனை குறித்து என்னவென்று கேட்பதற்காக டி.ஆர் ரஜினியிடம் பேச நினைத்தார். எனவே டி.ஆர் அவரது வீட்டிற்கு சென்று ரஜினிக்கு போன் செய்தார்.
அங்கு போனை எடுத்த ரஜினியின் உதவியாளரிடம் டி.ஆர் வீட்டில் இருந்து பேசுகிறோம் ரஜினி இருக்கிறாரா? என்று கேட்டுள்ளனர். உடனே ரஜினியிடம் பேசி விட்டு திரும்ப போன் செய்கிறேன் என்று வைத்து விட்டார்கள். அதற்குப் பிறகு இன்னொரு போன் கால் டி.ஆர் க்கு வந்தது.
அதில் பேசியவர்கள் ஏவிஎம் நிறுவனமா இது? என்று கேட்டிருக்கின்றனர் இல்லை ஏ.வி.எம் நிறுவனம் இல்லை இது டி.ஆரின் வீடு என்று கூறி இருக்கின்றனர்.
உடனே இருங்க ரஜினி சாரிடம் கொடுக்கிறேன் என்று மறுபக்கத்தில் பேசியிருக்கின்றனர். இது டி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே ரஜினியிடம் என்ன ரஜினி இப்படி எல்லாம் பேசுறீங்க எதுக்கு ஏ.வி.எம் நிறுவனமா என்று முதலில் கேட்டீர்கள் என கோபப்பட்டு கொண்டு போனை வைத்து விட்டார் டி.ஆர்.
அதற்குப் பிறகு ரஜினி இரண்டு மூன்று தடவை போன் செய்த பிறகு தான் டி.ஆர் போனை எடுத்தார் அப்பொழுது பேசிய ரஜினி நிறைய ரசிகர்கள் இந்த மாதிரி பிரபலங்களின் பெயரை சொல்லி பேசி விடுகிறார்கள் அதனால் தான் டெஸ்ட் செய்தோம் என்று அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் ரஜினி இந்த தகவலை அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார் அந்தணன்.