Tag Archives: இளவரசு

காலைல அஞ்சு மணி நேரம் மேக்கப் போட்டும் அசையாத கமல்!.. அசந்து போன படக்குழு!.

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். அதற்கு பல காரணங்களும் உண்டு. சிவாஜி கணேசனுக்கு பிறகு அவரை போலவே சினிமாவில் சிறப்பான நடிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய நடிகராக கமல்ஹாசன் இருந்தார்.

இதனாலேயே கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக இருந்தன. நடிகர் இளவரசு தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்திருக்கிறார். மிக தாமதமாகவே அவர் மக்கள் மத்தியில் நடிகராக அறிமுகமானார்.

அவர்  ஒரு பேட்டியில் கூறும்போது கமல்ஹாசனின் நடிப்பு குறித்து கூறியிருந்தார். ஒரு கைதியின் டைரி என்கிற திரைப்படத்தில் வீர சிவாஜியின் சிலையாக கமல்ஹாசன் நடிக்க வேண்டும். இதற்காக அவருக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் செய்துள்ளனர்.

மேக்கப் செய்துக்கொண்ட பிறகு கமல்ஹாசன் அங்கு சிலை போல அமர்ந்திருக்க அவரது முகத்தில் ஒரு எறும்பு சென்று கொண்டிருக்கும். பொதுவாக சிலை வேஷம் போட்டிருந்தாலும் முகத்தில் ஒரு பூச்சி செல்லும்போது ஒரு அசைவு நம்மை அறியாமலே வந்துவிடும்.

ஆனால் அப்படி எந்த ஒரு அசைவையும் காட்டாமல் கமல் சிலை போலவே அமர்ந்திருப்பார். நடிப்பின்போது எப்படி ஒரு ஈடுபாடு இருந்தால் அந்த காட்சியை அவர் அப்படி நடித்திருப்பார் என்கிறார் இளவரசு.

தம்பி அந்த மாதிரி இருந்தா உன்கிட்ட பேசவே மாட்டேன்!.. கருத்து கேட்ட நடிகரிடம் கலவரம் செய்த நடிகர் நாகேஷ்!..

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் காமெடிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது இருப்பதை விடவும் டாப் காமெடி நடிகர்கள் அப்போதைய சினிமாவில் இருந்தனர். நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சந்திரபாபு இப்படி எக்கச்சக்கமான காமெடி நடிகர்கள் அப்போது இருந்தனர்.

அவர்களுக்குள் போட்டியும் இருந்தது. அப்படியான நிலையில் தனிப்பட்டு நிற்பதற்காக ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் சிறப்பாக ஒன்றை செய்ய வேண்டி இருந்தது. அதில் தனித்துவமான நடிகராக நாகேஷ் இருந்து வந்தார். சந்திரபாபு போலவே நாகேஷும் தனித்துவமான உடல் மொழியை கொண்டுள்ளார்.

தனது அங்க அசைவின் மூலமாகவே காமெடி பண்ண தெரிந்தவர் நாகேஷ். நாகேஷ் இறுதியாக நடித்த திரைப்படம் 23 ஆம் புலிக்கேசி. இந்த திரைப்படம் குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். புலிக்கேசி படத்திற்காக விழா நடந்தப்போது வி.எஸ் ராகவனையும் நாகேஷையும் மட்டும் யாருமே கண்டுக்கொள்ளவில்லை.

actor nagesh

எனவே அவரை நான் சந்தித்து பேசி கொண்டிருந்தேன். அப்போது ஏதாவது அவரிடம் பேச வேண்டுமே என்பதற்காக சார் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். எதிர்காலத்தின் சிறந்த சேமிப்பு இறந்த காலத்தின் நினைவுகளேன்னு படிச்சேன். அதை பத்தி என்ன நினைக்கிறீங்க என கேட்டார் இளவரசு.

அதற்கு பதிலளித்த நாகேஷ் இறந்த காலத்தை நினைத்து கொண்டிருந்தால் நான் இப்படி இருக்கமாட்டேன். திருவிளையாடல் காலத்தில் நடித்து கொண்டிருந்த நாகேஷாக இருந்தால் இப்படி உன்னிடம் அமர்ந்து பேசி கொண்டிருப்பேனா என கேட்டுள்ளார் நாகேஷ். இந்த விஷயத்தை இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நான் உன்னை காக்கா பிடிக்கிறேன்னே நினைச்சுக்க!.. யோகி பாபுவிடம் இளவரசு சொன்ன விஷயம்!..

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக அந்த இடத்தை நிரப்புவதற்கு ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்பியவர்தான் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் கருப்பான தேகம் கொண்ட நடிகர்களால் சாதிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்த போதெல்லாம் அதனை பொய் என நிரூபித்த பல நடிகர்கள் உண்டு.

ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு என்ற அந்த கருப்பு நடிகர்கள் வரிசையில் யோகி பாபு முக்கியமானவர். ஏனெனில் பெரும்பாலும் பேசும்போது மக்கள் லட்சணத்தை பற்றி விரிவாக பேசுவார்கள்.

கருப்பாக இருந்தாலும் பெரிய முக லட்சணம் இருந்தால் தான் அவர்கள் சிறப்பான நடிகர்களாக முடியும் என்று பேசுவார்கள். பலரையும் உருவ கேலியும் செய்வார்கள். அப்படி சமூகத்தால் உருவ கேலிக்கு உள்ளாகி தற்சமயம் அதே சமூகத்திடம் ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார் நடிகர் யோகி பாபு.

ஆரம்பத்தில் காமெடியனாக நடிக்க துவங்கிய யோகி பாபு பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் அவருக்கு அதிலும் வெற்றி கிடைத்தது.

அப்படி அவர் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மண்டேலா. மண்டேலா திரைப்படம் அடிப்படையில் சாதிய அடிப்படையிலான கதையைக் கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு முடிவெட்டும் தொழிலாளியாக நடித்திருப்பார் யோகி பாபு.

முடி வெட்டும் பிரிவை சேர்ந்தவர்கள் பொதுவாகவே ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவே வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியே வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபுவின் ஒரு ஓட்டை வைத்து படத்தின் கதை செல்லும்.

இந்த திரைப்படம் குறித்து இளவரசு ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் அந்த படத்தை பார்த்தவுடனே யோகி பாபுவை நேரில் சந்தித்தேன் அப்பொழுது யோகி பாபுவிடம் ஒரு விஷயத்தை கூறினேன். யோகி பாபு நான் உன்னை காக்கா பிடிக்கிறேன் என்று நீ நினைத்துக் கொள். ஆனால் இந்த திரைப்படத்தில் நீ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாய் அப்படியான ஒரு நடிப்பை ஒரு பல வருடம் நடித்த ஒரு பெரும் நடிகர்களால் தான் கொண்டுவர முடியும்.

அதை நீ அசால்டாக செய்திருந்தாய் என்று அவரை நேரில் புகழ்ந்ததாக இளவரசு தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

நான் உலகநாயகனே கிடையாதுங்க கமல் ஆதங்கம்… அப்போ யாருதாங்க உலக நாயகன்?…

Kamal : கமல்ஹாசன் சினிமாவிலே வாழ்ந்த ஒரு ஜாம்பவான். 200க்கு அதிகமான படங்கள், எத்தனை எத்தனை வேஷங்கள். இவரை காண எத்தனை ரசிகர் கூட்டம் தவியாய் தவிக்கிறது.

இவருடைய குரல், நடை, நடிப்பு என்று தனது சிறு வயது முதல் அதாவது குழந்தை நட்சத்திரம் முதலே நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் சாதித்த சரித்திர நாயகன். இவருடைய உழைப்பு மற்றும் நடிப்பை வைத்து இவருக்கு உலகநாயகன் பட்டம் கொடுத்தது இந்த தமிழ் திரையுலகம்.

படத்தில் ஒரு வேடத்தில் நடிப்பதே சிரமம், இவர் ஒன்றல்ல, இரணடல்ல,  பத்து வேடங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாம் என்றால் இவர் சாதாரணமானவரா என்ன? ஆனால் இவருக்குள்ளே ஒரு கேள்வி நான் அப்படி என்ன செய்துவிட்டேன்? நான் அடைந்த வெற்றிகள் எல்லாம் எதிர்பார்த்தது தானே ஆனால் வயலில் வேலைபார்த்த ஒருவர் இசைஞானியானதை விடவா நான் சாதித்துவிட்டேன். சதாரண ஒருவர் இந்த தமிழ் சினிமாவை இயக்கி உயிர் கொடுத்ததை விடவா நான் சாதித்துவிட்டேன், ஒரு பஸ் நடத்துனர் இப்போ ஒரு சூப்பர் ஸ்டார் அவரை விடவா நான் சாதித்துவிட்டேன்.

என்னுடைய இந்த நிலைக்குத்தானே நான் ஆசைப்பட்டேன் ஆனால் அவர்கள் எல்லாரும் எங்கோ, எப்படியோ இருந்து வந்து தமிழ் சினிமாவில் எனக்கு இணையாக, என்னை விட மேலே உயர்ந்து நிற்கும் போது நான் வென்றது எல்லாம் சிறிய அளவே என்று பாபநாசம் படப்பிடிப்பில் கமல்ஹாசன் நடிகர் இளவரசுவிடம் தெரிவித்திருக்கிறார்.

வெற்றிபெற்ற ஒரு சிலர்  தலைக்கணத்தோடு இருப்பார்கள் ஆனால் இவரோ எப்படி ஒரு பெருந்தன்மையோடு இருக்கிறார் என்று நடிகர் இளவரசு பூரித்துப்போனார். தான் வென்றாலும் தன்னைப்போல் வென்றவரைப் போற்றும் உள்ளம் கொண்டவர் தான் நம்ம உலக நாயகன்.

குறைந்த வாடகைக்காக புகை பிடிச்ச அறையில் தங்கிய ரஜினி!.. ஆரம்பத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?..

சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் அனைத்து நடிகர்களும் சாதாரண மனிதர்களே, அவர்கள் சினிமாவிற்கு வரும்பொழுது எக்கச்சக்கமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆன பிறகு அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

அவர் இப்பொழுது கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள் அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தார். கர்நாடகாவில் பிறந்த ரஜினிகாந்த் தனக்கு இருந்த நடிப்பின் ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

அப்படி வாய்ப்பு தேடி வந்த பொழுது அவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்பு கிடைத்த பிறகு தங்குவதற்கு இடம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டார் ரஜினிகாந்த். அப்போது ஒரு இடத்தில் தங்குவதற்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து மாதம் 32 ரூபாய் என்கிற ரீதியில் தங்கும் இடம் கிடைத்தது.

ஆனால் ரஜினிகாந்திடம் குறைவாகவே காசு இருந்ததால் அங்கு இருந்த உரிமையாளரிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி சாப்பாடு செய்யும் இடத்தில் இருந்து புகை செல்லும் புகை போக்கிக்கு அருகில் ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் தங்கிக் கொள்ள 28 ரூபாய் கொடுத்தால் போதும் என்று கூறியிருந்தார்.

ஆனால் பகல் முழுதும் அந்த இடம் புகையாகதான் இருக்கும் இரவில் அடுப்பை நிறுத்திய பிறகு புகையெல்லாம் அடங்கி அந்த இடத்தில் இருக்கும் வெப்பமும் குறைந்த பிறகுதான் அங்க போய் படுக்க முடியும். அப்படியாக இரவு தூங்குவதற்கு மட்டும் அந்த அறைக்கு செல்வார் ரஜினிகாந்த் இப்படியே அங்கே தங்கி வாய்ப்பு தேடி தன் இவ்வளவு பெரிய நடிகராகியுள்ளார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்து எடுத்தார்.

சரியில்லையே உங்க படப்பிடிப்பு!.. செல்வராகவன் செயலால் கடுப்பான நடிகர் இளவரசு..

தமிழில் புதுப்பேட்டை திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் இயக்குனர் செல்வராகவன். புதுப்பேட்டைக்கு முன்பு நிறைய படங்கள் எடுத்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக புதுப்பேட்டைதான் இருந்தது.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை தனுஷ் செல்வராகவன் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானபோது அப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அதன் பிறகு அது அதிக வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு தமிழில் பெரும் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கினார் செல்வராகவன். இப்படியாக செல்வராகவன் நடிகர் சூர்யாவை வைத்து எடுத்த திரைப்படம் தான் என்.ஜி.கே. இந்த திரைப்படத்தில் நடிகர் இளவரசு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

படத்தின் படப்பிடிப்பு நடிக்கும் பொழுது நடக்கும் பொழுது இளவரசுவை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. சில காட்சிகளை ஒரே முறை எடுத்துவிட்டு சென்றுவிட்டார் செல்வராகவன். பொதுவாக ஒரு காட்சியை பல கோணங்களில் வைத்து இயக்குனர்கள் எடுப்பார்கள்.

ஆனால் அப்படி எடுக்காமல் நிறைய காட்சிகளை ஒரே கோணத்தில் எடுத்துவிட்டு சென்றார் செல்வராகவன். அப்போது பொறுமை தாங்காத இளவரசு கோபமாகி ஒரு முறை எதற்கு சார் இப்படி எடுக்கிறீர்கள் மூன்று நான்கு கோணங்களில் காட்சிகளை எடுப்பதில்லையா? என்று சத்தம் போட்டு விட்டார்.

செல்வராகவன் அதற்கு பதில் அளிக்கும் போது இல்லை சார் எனக்கு அத்தனை கோணங்களில் அந்த காட்சி தேவை இல்லை ஒரு கோணத்திலேயே ஒரு காட்சி எனக்கு போதுமானதாக இருக்கிறதா? இல்லையா என்று தெரிந்துவிடும் அதற்கு மேல் நான் எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அப்பொழுதுதான் செல்வராகவனிடம் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டேன் என்று இளவரசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.