Tag Archives: சங்கர்

என்ன லிஃப்ட்ல வச்சி ஸ்பீடா இறக்கி விபத்தாயிடுச்சு!.. இயக்குனருக்காக பிரபுதேவா எடுத்த ரிஸ்க்!..

Actor Prabhu deva : தமிழ் சினிமாவிற்கு இளம் வயதிலேயே நடன கலைஞராக வந்தவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் நடன கலைஞராக இருந்த பிரபுதேவா அதன் பிறகு ஒரு சில பாடல்களில் வந்து நடனமாடி சென்றார். ஆனால் அவருக்கு நடிப்பின் மீதும் அதிக ஈர்ப்பு இருந்தது.

ஆனால் தாமதமாக நடித்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டார். இந்த நிலையில் அவருக்கு கதாநாயகனாவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் ஒரு காமெடி கதாநாயகனாகதான் பிரபுதேவா நடித்து வந்தார்.

அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் அதையே தொடர்ந்து செய்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தயாரான காதலன் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. காதலன் திரைப்படம் எடுக்கப்படும்போதே பிரபலமான இயக்குனராக சங்கர் இருந்தார்.

எனவே எப்படியேனும் சங்கர் படத்தில் நடித்து பிரபலமாகிவிட வேண்டும் என்பது பிரபுதேவாவின் கனவாக இருந்தது. இந்த நிலையில் ஊர்வசி ஊர்வசி பாடல் எடுக்கும் போது அதில் மிகவும் கடினமான பல காட்சிகளை உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் பிரபுதேவா.

இதுக்குறித்து பிரபுதேவா ஒரு பேட்டியில் கூறும்போது 80 அடி உயரத்தில் இருந்த ஒரு பேனரின் மீது நின்று நாங்கள் ஆடியதை பார்த்து அங்கிருந்த போலீஸ்காரரே அரண்டு போனார். அதே போல பஸ்ஸின் மேல் நாங்கள் ஆடுவது போல் உள்ள காட்சிகளுக்கெல்லாம் எந்த கயிறும் கட்டாமல் ஆடினோம்.

அதில் ஒரு காட்சியில் லிஃப்ட்டில் நின்றுக்கொண்டு நான் கத்திக்கொண்டே கீழே போவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சியில் லிஃப்ட் இயக்குபவர்கள் சரியான நேரத்திற்கு அதை நிறுத்த மறந்ததால் லிஃப்ட் வேகமாக தரையில் அடித்து எனக்கு விபத்து ஏற்பட்டது என கூறியுள்ளார் பிரபுதேவா.

அந்த படத்தை தயாரிக்க முடியாதுன்னு மறுத்துட்டாரு!.. சங்கர் மறுத்து ஹிட் கொடுத்த திரைப்படம்..

Tamil Director Shankar: தமிழில் நிறைய ஹிட் படங்களை கொடுத்து பெரும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் சங்கர். தெலுங்கில் எப்படி பெரும் பட்ஜெட்டில் இயக்குனர் ராஜமௌலி திரைப்படம் இயக்குகிறாரோ, அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு ராஜமௌலியாக வலம் வருபவர் சங்கர்.

அவரது முதல் திரைப்படமான ஜென்டில்மேனில் தொடங்கி அனைத்து திரைப்படங்களுமே பெரும் பட்ஜெட் திரைப்படம்தான். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் சங்கர். சங்கரிடம் ஒரு நல்ல குணம் உண்டு சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையை யாராவது ஒருவர் வைத்திருந்தால் அவர்களுக்கு தயாரிப்பாளராக சங்கர் இருப்பது வழக்கமாகும்.

23ஆம் புலிகேசி திரைப்படத்திற்கு கூட சங்கர்தான் தயாரிப்பாளராக இருந்தார். இந்த நிலையில் அவரிடம் கதையை சொல்லலாம் என்று நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் பசங்க திரைப்படத்தின் கதையை சங்கரிடம் கூறினார். ஆனால் சங்கருக்கு அந்த கதையில் விருப்பமில்லை.

இந்த கதையை தயாரிப்பது கொஞ்சம் ரிஸ்க் இந்த படம் ஓடுமா என எனக்கு கண்டிப்பாக தெரியவில்லை எனவே நான் இந்த படத்தை தயாரிக்க முடியாது என கூறினார். ஆனால் அதற்கு நேர் மாறாக பசங்க திரைப்படம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்தது சில சமயங்களில் பெரும் இயக்குனர்களின் யூகங்கள் கூட தவறாகப் போகும் என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணமாக இருக்கிறது.

ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

தெலுங்கு சினிமாவில் இயக்குனர் ராஜமெளவுலி இருப்பது போலவே தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். சங்கர் இயக்கின்ற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க கூடியவை.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் சங்கர் முக்கியமானவர். தமிழில் அதிக ஹிட் கொடுத்த 2.0 திரைப்படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்பட்டது.

சங்கர் இயக்கி சினிமாவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார் இதில் ஒரு காட்சியில் அங்கவை, சங்கவை என்கிற இரண்டு பெண்களும் அதற்கு தந்தையாக சாலமன் பாப்பையாவும் நடித்திருப்பார்.

அந்த காட்சி குறித்து சாலமன் பாப்பையாவிடம் சங்கர் கூறும் போது கருப்பு என்பது மோசமான விஷயம் அல்ல. என்பதை வெளிப்படுத்தும் விதமாகதான் காட்சி அமைக்கப் போகிறோம். எனவே இரண்டு கருப்பான பெண்களுக்கு தந்தையாக நீங்கள் நடிக்க வேண்டும் என கூறி அவரை படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் உண்மையில் படத்தில் கருப்பு நிறத்தை கேளிக்கு உள்ளாக்கும் விதத்தில் அந்த காட்சிகள் அமைந்திருந்தது சாலமன் பாப்பையாவுக்கு தெரியாது. படம் வெளியாகும்போதுதான் இந்த விஷயம் சாலமன் பாப்பையாவிற்கு தெரிந்துள்ளது. அதுக்குறித்து அவர் கூறும்போது இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் அவர்கள் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள் எனக் கூறி திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். இத்தனைக்கும் காரணமாக இயக்குனர் சங்கர் இருந்துள்ளார்.