பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்து நடிகரானவர் நடிகர் சூரி. காதல் மாதிரியான சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா காமெடிக்கு பிறகுதான் பரோட்டா சூரி என அனைவராலும் அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் சூரி. அதற்கு பிறகு அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் விடுதலை.
விடுதலை திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக தனது கதாபாத்திரத்தை நடித்திருந்தார் சூரி. அதற்கு பிறகு தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் சூரி. இந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சூரி செல்லும்போது அங்கு தனது முதலாளியை கண்டுள்ளார் சூரி.
அவரது பழைய முதலாளிதான் லைட்மேன் நடராஜன். அவரை பார்த்ததும் பேசிய சூரி இங்கு பெரிய பெரிய வி.வி.ஐ.பி.களை அழைத்து வந்திருந்தால் கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். ஆரம்பக்கட்டத்தில் நான் சினிமாவிற்கு வந்தப்போது நடராஜன் அண்ணன் தான் எனக்கு உதவினார்.
நான் சினிமாவை விட்டு விட்டு ஊருக்கே சென்றுவிடலாம் என நினைத்தப்போதெல்லாம் அவர் எனக்கு ஆறுதல் கூறுவார். மேலும் எனக்கு அசிஸ்டெண்ட் வேலையும் கொடுத்து சம்பளமும் கொடுத்தார். என கூறினார் சூரி.
பின்னர் நேர்க்காணல் ஒன்றில் பேசிய லைட்ஸ்மேன் நடராஜன் கூறும்போது சூரி மிகப்பெரிய உழைப்பாளி. 1990களில் என்னிடம் 70 ரூபாய் வேலைக்கு வந்தார் சூரி. டிவி நிகழ்ச்சியில் பேசியப்பிறகு எனக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி கொடுத்து கையில் 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார் என மனம் நெகிழ்கிறார் நடராஜன்.