Tag Archives: நடிகர் சூரி

அண்ணே ஒரு படம் பண்ண போறேன்.. சந்தானம் படத்திற்கு சூரி செய்த உதவி..!

நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது.

விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது.

அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் தொடர்ந்து படங்களின் கதைகளம் மீது சூரி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது மேலாளருக்கு அவர் செய்த உதவி குறித்து சமீபத்தில் பேசியிருந்தார் சூரி. எனது மேலாளர் என்னிடம் காரியம் ஆக வேண்டும் என்று எப்பொழுதுமே காக்கா பிடித்தது கிடையாது.

ஒருமுறை என்னிடம் வந்து ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் அது குறித்து பைனான்சியரிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் யாராவது ஒரு பெரிய ஆள் கையெழுத்து போட்டால் தான் பணம் தருவேன் என்று கூறுகிறார்கள்.

எனவே நீங்கள் போட முடியுமா என்று என்னிடம் கேட்டார். நானும் சரி போடுகிறேன் என்று கூறினேன். அவர் சந்தனத்தை கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரிக்க போவதாக கூறினார். சந்தானம் நடிப்பில் வந்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தான் அது.

நான் ஒரு காமெடி நடிகர் என்னிடம் இன்னொரு காமெடி நடிகனை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டார் எனது மேலாளர். அவரது துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது எனவே நான் அவருக்கு உதவி செய்தேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் சூரி.

வாய்ப்பில்லை சூரி.. இனிமே அது நடக்காது.. ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்..

விடுதலை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூரி. நிச்சயமாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கதைகளம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

கிடைக்கும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. விடுதலை திரைப்படத்தில் நடித்த பொழுது சந்தேகத்துடன் தான் அந்த படத்தில் நடித்தேன் என்று சூரியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது வெற்றிமாறன் என்னிடம் முடிந்த அளவுக்கு நன்றாக இந்த படத்தை பண்ண வேண்டும் என்று கூறினார். நானும் நடித்து கொடுத்தேன். படம் முடிந்த பிறகு வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்.

இந்த படத்திற்கு பிறகு உங்களுக்கு காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவது என்பது கடினம் தான் என்று என்னிடம் கூறினார். அதேபோல விடுதலை திரைப்படம் வெளியான பிறகு எனக்கு காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்புகளை வரவில்லை தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு மட்டும்தான் கதைகள் வந்து கொண்டுள்ளன என்று கூறியிருக்கிறார் சூரி.

நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக  இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் சூரி.

உலக அளவில் விடுதலை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து சூரி நடித்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். அந்த சமயத்தில் ஒரு வதந்தி பரவி வந்தது. அதாவது சிவகார்த்திகேயன் வேண்டும் என்றே கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரியை நடிக்க வைத்துள்ளார்.

அது ஒரு உலக சினிமா என்பதால் சூரியின் மார்க்கெட்டை அது குறைத்துவிடும் என்று சிவகார்த்திகேயன் இதை செய்துள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தன. அதற்கு சமீபத்தில் பதில் அளித்த சூரி கூறும்போது என் சினிமா வளர்ச்சியில் கொட்டுக்காளி திரைப்படத்திற்கும் முக்கிய பங்குண்டு.

எல்லோருமே ஒரே மாதிரி திரைப்படங்களை எடுத்தால் கொட்டுக்காளி மாதிரி திரைப்படங்களை யார் எடுப்பது என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூரி.

சூரி விடுதலை படத்துக்காக இழந்தது அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிங்கம் புலி.!

தற்சமயம் காமெடி நடிகனாக இருந்து கதாநாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார்.

பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே சூரி தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால் அவரது திரைப்படங்களுக்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்து இருக்கிறது. காமெடியனாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் சூரி.

அதற்கு முன்பு நிறைய கஷ்டங்களை அவர் பட்டிருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து சிங்கம் புலி பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இயக்குனர் மணிவண்ணனிடம் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு சூரியை தெரியும்.

actor soorie

அப்பொழுதெல்லாம் சூரி ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருப்பார். விடுதலை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அதில் சூரியின் இழப்பு யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் விடுதலை திரைப்படத்திற்காக சூரி நடிக்க வேண்டி இருந்தது அந்த சமயங்களில் அவர் பிரபல காமெடி நடிகராக இருந்ததால் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிகபட்சம் ஒரு திரைப்படத்திற்கு 20 நாட்கள் தான் கால்ஷீட் கொடுப்பார் சூரி அப்படி கணக்கு பார்த்தால் ஒன்றரை வருடத்தில் எத்தனை படங்களுக்கு சம்பளத்தை அவர் இழந்து இருக்கிறார் என்று தெரியும் என்று கூறியிருக்கிறார் சிங்கம் புலி.

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை.. யார் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் பல காலங்களாக கஷ்டப்பட்டு தற்சமயம் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்துள்ளார் நடிகர் சூரி.

ஒரு காமெடி நடிகராக பிரபலமடைய வேண்டும் என்பதுதான் அவர் ஆசையாக இருந்தது. கதாநாயகனாக மாறியது என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும்.

விடுதலை திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் கதாநாயகனாக தன்னை உருவாக்கிக் கொண்டார் சூரி . அதற்கு பிறகு அவர் நடித்த கொட்டுக்காளி கருடன் மாதிரியான திரைப்படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

இப்பொழுது தமிழ் மக்களை பொறுத்தவரை சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு அவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல சூரியும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூரியுடன் இணையும் நடிகை:

aishwarya lakshmi

இந்த நிலையில் அடுத்ததாக அவருடைய நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூரி.

விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியன். இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பெரிய நடிகைகள் சூரிக்கு ஜோடியாக நடிக்க துவங்கியது மூலம் தற்சமயம் சூரி வளர்ந்து வரும் நடிகராக மாறி இருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில் மார்க்கெட் இருக்கும் நடிகர்களோடு மட்டும்தான் ஐஸ்வர்யா லட்சுமி மாதிரியான பெரிய நடிகர்கள் நடிப்பார்கள். எனவே போகப் போக இன்னும் முக்கிய நடிகைகள் கூட சூரிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

விடுதலை மூன்றாம் பாகம் வருதா? வெளிவந்த அப்டேட்..

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சூரி, தமிழ் ரசிகர்களின் மனதில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர். விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல நல்ல நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் சூரி தான். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக தனக்கு பல ரசிகர்களை ஏற்படுத்தி வைத்திருந்த நடிகர் சூரி தற்போது பல படங்களிலும் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விடுதலை படத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் சூரி தற்போது விடுதலை படத்தின் அப்டேட் பற்றிய செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது.

நடிகராக அவதாரம் எடுத்த சூரி

இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜூமேனன், இளவரசு, பாலாஜி, சக்திவேல், சரவண சுப்பையா மற்றும் பல நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்தனர். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சிகளுக்கு இடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. வணிக ரீதியாக நல்ல வசூலை பெற்று கொடுத்தது. இந்நிலையில் தான் விடுதலை பாகம் 2 வெளியாக உள்ள நிலையில் தற்போது விடுதலை பாகம் மூன்று பற்றிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

விடுதலை பாகம் 3

தற்போது விடுதலை பாகம் ஒன்றின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தில் பல கதாபாத்திரங்கள் தற்போது வந்துள்ள காரணத்தினால் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் இருப்பதால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் மற்றும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பவானி, நடிக்கிறார்கள். மேலும் விடுதலை பாகம் 2ல் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சுவாரியர் உள்ள புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகம் இரண்டு இன்னும் வெளிவராத நிலையில், விடுதலை பாகத்தின் மூன்றைப் பற்றிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு காரணம் விடுதலை பாகம் 2 படத்தின் நீளம் 4 மணி நேரமாக உள்ளதால், படத்தின் மூன்றாவது பாகம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னும் வெளிவராத நிலையில் தற்போது இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது ப்ளாக்பஸ்டர் லெவல்!.. வசூலில் சம்பவம் செய்த கருடன் திரைப்படம்..

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அவரது காமெடி பிரபலமானதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக வாய்ப்புகளை பெற்றார்.

அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக கதாநாயகனாகவும் சினிமாவில் என்ட்ரி ஆனார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக கதாநாயகனாக இவர் அறிமுகமானார்.

ஹீரோவாக வரவேற்பு:

விடுதலை திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை தாண்டி சூரி இப்படி ஒரு அசாத்தியமான நடிப்பு திறமையை கொண்டவர் என்பது அந்த திரைப்படத்தில்தான் தெரிந்தது.

அதனை தொடர்ந்து கொட்டு காளி தற்சமயம் கருடன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சூரி. இந்த நிலையில் கருடன் திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருடன் திரைப்படம் இதுவரை 30 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. நடிகர் சூரியின் நடிப்பில் ஒரு திரைப்படம் இந்த அளவிற்கு வசூல் செய்திருப்பது பெரிய விஷயமாகும். ஏனெனில் சமீபத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் கூட 30 கோடிகள் வசூல் செய்யவில்லை எனவே இது சூரிக்கு நல்ல வெற்றி படம் என்றுதான் கூற வேண்டும்.

அந்த நாடகத்துல நானும் சூரியும் சேர்ந்து நடிச்சோம்!.. பிர்லா போஸ் ஓப்பன் டாக்..

பழக்காலங்களாகவே நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் பிர்லா போஸ். இவருக்கு முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தியாகம் என்னும் தொடரில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் பிர்லா போஸ் பெரும்பாலும் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருந்து வரும் நடிகராகவே இருந்து வருகிறார்.

நாடகங்களில் எண்ட்ரி:

2013 ஆம் ஆண்டு இவர் மகாபாரதம் டிவி சீரியலில் சகாதேவன் கதாபாத்திரத்தை எடுத்து நடித்தார். அதன் பிறகு 2021 வது ஆண்டில் அன்பே வா என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்படியாக தொடர்ந்து நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வரும் பிர்லா போஸ் அவருக்கும் சூரிக்குமான உறவு குறித்து தற்சமயம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது திருமதி செல்வம் நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அப்பொழுது சூரி வந்தார்.

சூரியுடன் பழக்கம்:

அப்போதிலிருந்து எனக்கும் சூரிக்கும் பழக்கம் உண்டு. அப்பொழுது சின்ன கதாபாத்திரம் என்றாலும் கூட அதையும் சிறப்பாக எடுத்து நடிக்க கூடியவராக சூரி இருந்திருக்கிறார்.

Soori at Marudhu Press Meet

அந்த உழைப்புதான் அவரை இப்படியான ஒரு உச்சத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அதற்காக நான் அவருக்கு பாராட்டுக்கள் கூற வேண்டும் என்று நினைத்தேன் அதற்காக இந்த மேடையை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறி அந்த மேடையிலேயே சூரிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தால் நடிகர் பிர்லா போஸ்.

கருடன் படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பளம்!.. ஆத்தாடி இவ்வளவா..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்த நடிகர் சூரி தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டுள்ளார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் விடுதலை. அதற்கு முன்பு சூரியை காமெடி நடிகராக பார்த்து வந்த மக்கள் அவரை உடனே கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர்.

விடுதலை படத்தில் சூரி ஏற்றுகொண்ட கதாபாத்திரமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எடுத்த உடனேயே அதிக சண்டை காட்சிகளை கொண்ட மாஸ் கதாபாத்திரமாக களம் இறங்கியிருந்தால் அது சூரிக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுத்திருக்காது.

actor-soori

எனவேதான் சூரி கதைகளை தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவம் காட்டுகிறார். வெகு நாட்கள் காத்திருந்த பிறகுதான் விடுதலை திரைப்படத்திலேயே அவர் நடித்துள்ளார்.

சூரி வாங்கிய சம்பளம்:

 இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அடுத்து சசிக்குமாருடன் இணைந்து கருடன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

garudan movie

இந்த திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோ என கூறப்படுகிறது. கருடன் படத்திற்கு சூரி வாங்கியிருக்கும் சம்பளம் 8 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களான மணிகண்டனும், கவினும் கூட இன்னமும் அந்த அளவு சம்பளத்தை தொடவில்லை.

ஒரு காலத்தில் சினிமாவிற்கு லைட் பாயாக வேலைக்கு வந்த சூரி 20 வருட போராட்டத்திற்கு பிறகு அதில் சாதித்துள்ளார் என்றே கூறலாம்.

நான் சினிமாவில் வளர்ந்ததற்கு நடராஜன் அண்ணந்தான் காரணம்!.. மனம் திறந்த சூரி.. யார் அந்த நடராஜன் தெரியுமா?

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்து நடிகரானவர் நடிகர் சூரி. காதல் மாதிரியான சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா காமெடிக்கு பிறகுதான் பரோட்டா சூரி என அனைவராலும் அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் சூரி. அதற்கு பிறகு அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் விடுதலை.

விடுதலை திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிறப்பாக தனது கதாபாத்திரத்தை நடித்திருந்தார் சூரி. அதற்கு பிறகு தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் சூரி. இந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு சூரி செல்லும்போது அங்கு தனது முதலாளியை கண்டுள்ளார் சூரி.

actor suri

அவரது பழைய முதலாளிதான் லைட்மேன் நடராஜன். அவரை பார்த்ததும் பேசிய சூரி இங்கு பெரிய பெரிய வி.வி.ஐ.பி.களை அழைத்து வந்திருந்தால் கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். ஆரம்பக்கட்டத்தில் நான் சினிமாவிற்கு வந்தப்போது நடராஜன் அண்ணன் தான் எனக்கு உதவினார்.

நான் சினிமாவை விட்டு விட்டு ஊருக்கே சென்றுவிடலாம் என நினைத்தப்போதெல்லாம் அவர் எனக்கு ஆறுதல் கூறுவார். மேலும் எனக்கு அசிஸ்டெண்ட் வேலையும் கொடுத்து சம்பளமும் கொடுத்தார். என கூறினார் சூரி.

பின்னர் நேர்க்காணல் ஒன்றில் பேசிய லைட்ஸ்மேன் நடராஜன் கூறும்போது சூரி மிகப்பெரிய உழைப்பாளி. 1990களில் என்னிடம் 70 ரூபாய் வேலைக்கு வந்தார் சூரி. டிவி நிகழ்ச்சியில் பேசியப்பிறகு எனக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி கொடுத்து கையில் 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார் என மனம் நெகிழ்கிறார் நடராஜன்.

‘விடுதலை 2’ : வெறியான வெற்றிமாறன் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை 2’ படத்திற்காக ரசிகர்கள்  பல மாதங்களாக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில்,  படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனது பெயருக்கு ஏற்றது போல, இதுவரை தோல்வி எதுவும் கொடுக்காமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை குவித்து வருபவர் தன இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் ஐகோனிக் ஆன பல படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் இவர். 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை’ படம் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக்கி வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மும்முரமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படத்தின் ஷுட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ‘விடுதலை 2’ படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் புதிய கதாபாத்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் தகவல்கள்  கூறப்படுகிறது. இவர்களுக்கான தனிப்பட்ட கதையும் வெற்றிமாறன் எழுதியுள்ளாராம். 

இதனால் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் எனவும்  இன்னமும் 5 மாதம் வரை படத்தின் வேலைகள் தொடரலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல், ‘விடுதலை 2’ படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் வெறியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் முதலில் நான் நடிக்கவிருந்த படம்!.. ஆனால் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைச்சிட்டு!.. பதிலுக்கு சூரி செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor Soorie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் யாரும் யோசிக்காத அளவிலான உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சூரி.

விடுதலை திரைப்படம்தான் சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என கூறலாம். சிவகார்த்திகேயனை போல் சாதாரண திரை கதைகளை தேர்ந்தெடுக்காமல் சூரி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் எல்லாமே உலக அளவில் பிரபலமாகும் கதைகளாக இருக்கின்றன.

விடுதலை திரைப்படத்தை பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சூரி நடித்த கொட்டுக் காளி திரைப்படம் தொடர்ந்து நிறைய திரைப்பட விழாக்களில் வெளியாகி வருகிறது அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Soori at Marudhu Press Meet

அடுத்து இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்படியாக சூரி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருப்பதால் வெகு சீக்கிரத்திலேயே பெரும் உயரத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப வாழ்க்கை

ஆனால் ஆரம்பத்தில் சூரி சினிமாவுக்கு வந்த பொழுது ஒரு சின்ன கதாபாத்திரமாவது கிடைக்காதா? என்று ஏங்கிய நாட்களும் உண்டு. ஆர்யா நடித்த கள்வனின் காதலி திரைப்படம் துவங்க இருந்தபோது அந்த படத்திற்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதற்கு ஆடிஷன் நடந்தது.

அப்பொழுது அங்கு சென்ற சூரி சாப்பிடாமல் சென்றதால் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். பிறகு அவரை அமர வைத்து ஆறுதல் கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் அன்று மயக்கம் அடையவில்லை என்றால் அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று மனம் வருந்தினார் சூரி.

அதன் பிறகு அவர் நிறைய திரைப்படங்கள் நடிக்க துவங்கிய பிறகு அவருக்கென்று ஒரு அலுவலகம் அமைக்க வேண்டி இருந்தது. அப்பொழுது கள்வனின் காதலி படத்தின் ஆடிஷன் நடந்த அந்த அலுவலகத்தையே தன்னுடைய அலுவலகமாக வாங்கினார் சூரி. அது தனக்கு எப்போதுமே பழைய நினைவு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் என்று வாங்கியதாக ஒரு பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.