தற்சமயம் காமெடி நடிகனாக இருந்து கதாநாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார்.
பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே சூரி தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால் அவரது திரைப்படங்களுக்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்து இருக்கிறது. காமெடியனாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் சூரி.
அதற்கு முன்பு நிறைய கஷ்டங்களை அவர் பட்டிருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து சிங்கம் புலி பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இயக்குனர் மணிவண்ணனிடம் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு சூரியை தெரியும்.
அப்பொழுதெல்லாம் சூரி ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருப்பார். விடுதலை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அதில் சூரியின் இழப்பு யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் விடுதலை திரைப்படத்திற்காக சூரி நடிக்க வேண்டி இருந்தது அந்த சமயங்களில் அவர் பிரபல காமெடி நடிகராக இருந்ததால் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதிகபட்சம் ஒரு திரைப்படத்திற்கு 20 நாட்கள் தான் கால்ஷீட் கொடுப்பார் சூரி அப்படி கணக்கு பார்த்தால் ஒன்றரை வருடத்தில் எத்தனை படங்களுக்கு சம்பளத்தை அவர் இழந்து இருக்கிறார் என்று தெரியும் என்று கூறியிருக்கிறார் சிங்கம் புலி.