Tag Archives: விஜய் சேதுபதி

ரொமான்ஸ்ல திரிஷாவை மிஞ்ச முடியாது.. என்னோட கனவு கன்னி… ஓப்பன் டாக் கொடுத்த விஜய் சேதுபதி.!

சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. வில்லன், காமெடி, ஹீரோயிசம் என அனைத்தையும் சிறப்பாக செய்ய கூடியவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களை போல தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடிக்கிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுப்பவர் விஜய் சேதுபதி.

முக்கியமாக நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரமாக இருந்தால் உடனே அதை தேர்ந்தெடுத்து நடித்து விடுவார். அந்த அளவிற்கு நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் உண்டு. எந்த ஆக்‌ஷன் காட்சிகளும் இல்லாமல் காதல் கதையை மட்டும் கொண்டு விஜய் சேதுபதி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் 96.

இந்த திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு திரை துறையிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி அதிகமாக இந்த படம் குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் அந்த சமயத்தில் த்ரிஷா குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதில் பேசிய விஜய் சேதுபதியிடம் நிரூபர்கள் கேட்கும்போது உங்கள் இருவரில் யார் மிகவும் ரொமான்ஸான ஆள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி த்ரிஷாதான் என்னை விட சீனியர். பல இளைஞர்களுக்கு ஏன் அவர் கனவு கன்னியாக இருக்கிறார் என்றால் அவரது முக பாவனைகள்தான் அதற்கு காரணம்.

அந்த முகபாவனையால் எனக்கும் அவர்தான் கனவு கன்னி எனவே என்னை விட அவர்தான் ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பாக நடிக்க கூடியவர் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

என் தங்கை திருமணத்தில் விஜய் சேதுபதி செய்த செயல்..! உண்மையை கூறிய குட்நைட் மணிகண்டன்.!

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்த மணிகண்டனுக்கு ஜெய்பீம் திரைப்படத்திற்கு முன்பே பட வாய்ப்புகள் கிடைத்தது.

அப்படியாகதான் அவர் விக்ரம் வேதா, ககபோ போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தில் அந்த பழங்குடியின கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்பது இயக்குனரின் எண்ணமாக இருந்தது.

அப்படியாக அந்த திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். ஆனால் அந்த திரைப்படம் அவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதற்கு பிறகுதான் குட் நைட் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.

actor-manikandan

அதனை தொடர்ந்து அவர் லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் அவரது அறிமுகம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதி அண்ணனை ககபோ திரைப்படத்தில் நடித்தப்போது எனக்கு விஜய் சேதுபதியுடன் பேசுவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒரு முறை மழை பெய்யும்போது அவருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் அவரிடம் பேசியபோது நின்று கேட்டுக்கொண்டிருந்த விஜய் சேதுபதி பிறகு பல மணி நேரங்கள் என்னிடம் பேசி வந்தார். அப்போது எனது தங்கைக்கு சின்ன சிகிச்சை ஒன்று செய்ய வேண்டி இருந்தது.

அதற்கு பண உதவி செய்து உதவினார் விஜய் சேதுபதி, மேலும் பிறகு என்னுடைய தங்கச்சிக்கு திருமணம் நடந்தது. அதற்கு நான் அழைக்காமலே வந்த விஜய் சேதுபதி எனக்கு 3 லட்ச ரூபாயை கையில் கொடுத்து சென்றார். அப்போது அந்த பணம் இல்லை என்றால் பெரிய பண நெருக்கடியில் சிக்கியிருப்பேன் என கூறியுள்ளார் மணிகண்டன்.

 

முழுக்க முழுக்க ஆக்‌ஷ்ன் த்ரில்லர்.. விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படம்… வெளியான ப்ரோமோ..!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீப காலங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

கடைசியாக அவரது நடிப்பில் விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஒரு ட்ரெயினுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மொத்த கதையாக இருக்கிறது.

இந்த படம் குறித்த அப்டேட்டை முன்பே அறிவித்திருந்தார் மிஸ்கின். இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்றை விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்கின் வெளியிட்டுள்ளார்.

அதில் பார்க்கும்போது படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக இருக்கும். மேலும் விஜய் சேதுபதிக்கும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் டப்பிங்கில் கூட விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டு பணிப்புரிந்துள்ளார் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

ஆஸ்கர் இயக்குனருடன் சேரும் விஜய் சேதுபதி.. மகாராஜாவால் வந்த அங்கீகாரம்.!

தமிழ் சினிமாவில் மோசமான திரைப்படங்கள் முதல் நாளே வரவேற்பை இழந்து வெற்றி வாய்ப்பை இழக்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. எனவே அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என கூறி வருகின்றனர்.

ஆனால் அதே சமயம் நல்ல படங்கள் பெரிதாக விளம்பரம் இல்லை என்றாலும் கூட நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமடைகிறது. சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட அப்படியான ஒரு படமாகதான் இருந்தது.

இந்த நிலையில் அதே போல போன வருடம் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் முக்கிய படமாக இருந்தது. ஏற்கனவே திரையில் வரவேற்பை பெற்ற மகாராஜா நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு உலக அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் சீனாவில் வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அதில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட்டில் ரெவணண்ட் மாதிரியான படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வாங்கியவர் இயக்குனர் அலெஜாண்ட்ரோ கோன்சாலஸ் இன்யாரிட்.

இவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு வாய்ப்பு தருவதாக கூறப்படுகிறது.மேலும் விஜய் சேதுபதிக்கும் அடுத்து அவர் எடுக்கவிருக்கும் படத்தில் வாய்ப்பு தர இருப்பதாக பேச்சுக்கள் உள்ளன.

8 நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்.. டோட்டல் டேமஜ் போல..!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான திரைப்படமாக விடுதலை 2 திரைப்படம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமையவில்லை.

முக்கியமாக திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனான சூரிக்கு இந்த திரைப்படத்தில் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லை என்று கூறப்படுகிறது. விடுதலை முதல் பாகத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரமாக இருந்தார்.

ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என்று பலரும் அறிந்த விஷயம் தான் என்றாலும் கூட சூரியின்  கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்படியான காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமையவில்லை இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தில் வசனங்களும் மிக அதிகமாக இருக்கிறது ஏதோ மாநாட்டுக்கு சென்றது போல தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறினர்.

அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது குறைந்தது. படம் வெளியாகி எட்டு நாட்கள் நிறைவடைந்த நிலையில் மொத்தமாகவே இந்த திரைப்படம் 48 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது.

படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்பொழுது இது மிகக் குறைந்த அளவிலான வசூல் என்று கூறப்படுகிறது. ஓடிடி விற்பனை மற்றும் சேட்டிலைட் விற்பனை மூலமாக சம்பாதிக்கும் தொகையை கணக்கிட்டால் கூட படத்திற்கு பெரிய லாபம் என்று எதுவும் வராது என்று கூறப்படுகிறது.

 

விடுதலை 2 முதல் நாள் வசூல் நிலவரம்.. எதிர்பார்த்த அளவு இல்லை..!

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் செய்யும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டது.

முதல் பாகத்தை பொறுத்தவரை அதில் சூரிதான் படம் முழுக்கவும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பார். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தை பொறுத்தவரை இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதிதான் வருகிறார்.

படத்தின் வசூல்:

viduthalai 2

விஜய் சேதுபதியின் பழைய வாழ்க்கை, எதற்காக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார் இப்படி பல விஷயங்களை படம் பேசுகிறது. இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படம் முதல் பாகத்தை விடவும் அதிக வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படம் மொத்தமாக முதல் நாள் 7 கோடி ரூபாய்தான் வசூல் செய்துள்ளது. போக போக இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கலாம் என ஒருப்பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

விடுதலை 2 எப்படி இருக்கு.. படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கே நல்ல வரவேற்பு இருந்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருக்கிறது. விடுதலை 2 திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிதான் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார்.

அவரது பழைய கால கதைகளும் வருகின்றன. ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

விடுதலை 2 திரைப்படம்:

viduthalai 2

இந்த நிலையில் தற்சமயம் திரையில் வெளியாகியிருக்கும் விடுதலை 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் படம் குறித்து கூறும் பொழுது விருதுகளுக்கு தகுதியான ஒரு திரைப்படமாக விடுதலை 2 இருக்கிறது.

விஜய் சேதுபதியின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அதிகபட்சம் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தான் வந்த வண்ணம் இருக்கிறது எனவே இந்த திரைப்படம் கண்டிப்பாக அதிக வசூலை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட சென்னைல நான் நடிக்க வேண்டியது.. பறிபோன 3 வாய்ப்புகள். மனசு கஷ்டப்பட்டுறப்பேன்.. விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் காட்டும் சர்ச்சையான இயக்குனர்கள் படங்களில் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இயக்குனர் வெற்றிமாறன் என்னதான் நிறைய விஷயங்களை தன் திரைப்படத்தில் பேசினாலும் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நிறைய நடிகர்கள் வெற்றிமாறன் படத்தில் நடிப்பதற்கு காத்திருக்கின்றனர் அப்படியாக தமிழ் சினிமாவிலும் காத்திருந்தவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.

இது குறித்து தனது பேட்டியில் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது வெற்றிமாறன் திரைப்படங்களில் நான் வாய்ப்பு கேட்டு இருக்கிறேன்.

விஜய் சேதுபதி கேட்ட வாய்ப்பு:

viduthalai 2

வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தின் போது நான் அங்கு சென்று வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு ஆடுகளம் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதும் நான் வாய்ப்பு கேட்டேன்.

ஆனால் வெற்றி மாறன் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பிறகு நான் வெகு காலங்கள் கழித்து பெரிய நடிகராக மாறிய பிறகும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் வடசென்னை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. என்னை நேரில் அழைத்து வெற்றிமாறன் படத்தின் கதையை கூறினார். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் விடுதலை 2  திரைப்படத்தில் எட்டு நாட்கள் மட்டும் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சரி என்று நானும் நடிப்பதற்கு சென்றேன். ஆனால் அதற்குப் பிறகு அந்த படத்தில் முழுமையாக நடிக்க வேண்டியதாக இருந்தது.

ஒருவேளை எட்டு நாளில் என்னை அவர் வீட்டுக்கு அனுப்பி இருந்தால் நான் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய்தான் அந்த தத்துவம் இல்லாத தலைவரா?.. விடுதலை 2 குறித்து கூறிய விஜய் சேதுபதி..!

தமிழில் தொடர்ந்து அரசியல், சமூக பிரச்சினைகளை தனது திரைப்படங்களின் வழியாக கூறிவரும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றி மாறன் மிக முக்கியமானவர்.

ஏனெனில் பொதுவாக அரசியல் சார்ந்த விஷயங்களை திரைப்படங்களில் பேசும்போது அந்த திரைப்படங்களுக்கு வசூல் சாதனையோ அல்லது பெரிய வெற்றியோ கிடைக்காது.

ஆனால் அதையே வெற்றிமாறன் பேசும்பொழுது படம் வசூல் ரீதியான சாதனைகளையும் படைத்துவிடும். அதே சமயம் மக்களுக்கு தேவையான கருத்தையும் கூறிவிடும். அப்படியாக வெற்றிமாறன் இயக்கிய முக்கியமான திரைப்படம் விடுதலை.

விடுதலை திரைப்படம் பேசிய விஷயங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமும் பேசாத விஷயங்களாகும். அதனால் அந்த திரைப்படம் தனித்துவமான படமாக இருந்தது. இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படமும் உருவாகி இருக்கிறது.

விஜய் குறித்து விடுதலை 2:

viduthalai 2

வருகிற 20-ஆம் தேதி விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது விடுதலை 2 திரைப்படம் மீது மக்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை 2 ட்ரெய்லரில் ஒரு வசனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் சேதுபதி கூறும் பொழுது தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள். அதுவும் முன்னேற்றத்திற்கு உதவாது என்று ஒரு வசனம் இருக்கும்.

இது விஜய்யை குறிப்பிட்டு வைக்கப்பட்ட வசனமா என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி வாத்தியார் தன்னை பற்றி கூறுவதற்காக அவரது நண்பரிடம் கூறும் ஒரு வசனம் தான் அது மற்றபடி யாரையும் குறிப்பிடும் படியான ஒரு வசனம் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அந்த டயலாக்கை நீக்க முடியாது.. என்ன வேணா பண்ணிக்கோங்க.. விடுதலை 2வால் சென்சார் குழுவோடு பிரச்சனை..! வெற்றிமாறனின் முடிவு..!

தமிழ் சினிமாவில் சாதாரணமாக சண்டை காட்சிகளை வைத்து மசாலா படங்கள் இயக்கும் இயக்குனர்களுக்கு நடுவே சமூகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை திரைப்படம் வழியாக பேசும் இயக்குனர்கள் சிலர் உண்டு அப்படியான இயக்குனர்களில் வெற்றி மாறன் முக்கியமானவ.

தெலுங்கு சினிமாவில் இருக்கும் விஜய தேவர கொண்டா, அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் மாதிரியான நடிகர்களே தொடர்ந்து இந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு வெற்றிமாறன் பெரிய இயக்குனராக வளர்ந்து இருக்கிறார்.

அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே உலக அளவில் பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் விடுதலை. அதனை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படமானது பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்கள் மத்தியிலும் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

விடுதலை 2:

இந்த நிலையில் இந்த படம் வருகிற 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது விடுதலை முதல் பாகத்தை விட இந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக சென்சார் சான்றிதழை வாங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

viduthalai 2

பொதுவாக சென்சார் குழுவினர் ஏ என்கிற சான்றிதழை 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கான சான்றிதழாக வைத்திருக்கின்றனர். திரைப்படங்களில் அதிக ஆபாச காட்சிகளோ அல்லது வன்முறையான காட்சிகளோ இருந்தால் இந்த ஏ சர்டிபிகேட் வழங்கப்படும்.

ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் அதற்காக வழங்காமல் படத்தில் இருக்கும் ஒரு வசனத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை வெளிப்படுத்தும் விதமான ஒரு பெரிய வசனம் திரைப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தணிக்கை குழு கூறிய விஷயம்:

அந்த வசனத்தை நீக்கும் படி தணிக்கை குழு வெற்றி மாறனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அந்த வசனம்தான் திரைப்படத்தின் அஸ்திவாரமே அதனால் அதை நீக்கவே முடியாது என்று வெற்றிமாறன் கூறிவிட்டார். இதனால் அதை நீக்காவிட்டால் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் வழங்குவோம் என்று சென்சார் குழுவினர் கூறியுள்ளனர்.

பரவாயில்லை ஏ சான்றிதழ் கொடுத்தாலும் நான் மாற்ற மாட்டேன் என்று வெற்றிமாறன் கூறி இருக்கிறார். இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் கூட இதுக்குறித்து சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் இருக்கின்றன.

சூர்யாவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி.. அதுக்குள்ள சபதத்தை கை விட்டுட்டாரே..!

கங்குவா திரைப்படத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சூர்யா தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த திரைப்படம் கண்டிப்பாக அவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்திருக்கின்றன என்பதால் இந்த திரைப்படம் சூர்யாவிற்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி நடிக்க போவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். நிறைய பேருக்கு பழக்கத்தின் காரணமாக நடித்தும் கொடுத்திருக்கிறார்.

vijay sethupathi

களம் இறங்கும் விஜய் சேதுபதி:

ஆனால் சமீபத்தில் அவர்கள் பேட்டியில் கூறும்பொழுது இனி வில்லனாகவும் நடிக்க மாட்டேன், பழக்கத்திற்காகவும் நடித்துக் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அப்படி இருக்கும் பொழுது சூர்யாவுடன் இப்பொழுது சேர்ந்து நடிக்கிறாரே என்கிற கேள்வி பலருக்கும் இருந்தது.

ஆனால் இது குறித்து சினிமா வட்டாரத்தினர் கூறும் பொழுது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சூர்யாவிற்கு நண்பனாக நடிப்பதாகவும் இது விடுதலை மாதிரி ஒரு இரட்டை கதாநாயகன் கதை என்றும் கூறுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களை ஆர்.ஜே பாலாஜி எப்படி கையாள போகிறார் என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.

டிவிட்டரில் திட்டிய நபரை விரட்டி சென்ற விஜய் சேதுபதி பட இயக்குனர்… இந்த கதை தெரியுமா?

சில நேரங்களில் இயக்குனர் நடிகர்கள் என்று இருவருக்குமே ஒரு திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்துவிடும். எப்போதாவது ஒருமுறை தமிழ் சினிமாவிலும் மற்ற சினிமாவிலும் இந்த மாதிரி நடக்கும்.

அந்த மாதிரி விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் சீனு ராமசாமிக்கும் முக்கிய படமாக அமைந்த திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். சீனு ராமசாமி அதை இயக்கினார்.

இருவருமே அப்போது பிரபலமாக இல்லை. ஆனால் பிறகு இருவரும் பிரபலம் அடைந்த பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து தர்மதுரை என்கிற திரைப்படத்தை உருவாக்கினர். ஆனால் அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து மாமனிதன் என்கிற படத்தை உருவாக்கினர்.

இயக்குனருக்கு நடந்த நிகழ்வு:

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெரிய பிரபலங்களை குறித்து மோசமாக விமர்சிப்பது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. அப்படி சீனு ராமசாமிக்கு நடந்த நிகழ்வு குறித்து அவர் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது ஒரு நாள் நான் ஒரு படத்தின் போஸ்டரை போட்டபொழுது அதன் கமெண்டில் வந்து ஒரு பையன் கெட்ட வார்த்தையில் என் படத்தை திட்டி இருந்தான்.

நான் அவனது புகைப்படத்தை பார்த்த பொழுதே இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் பிறகுதான் தெரிந்தது. அவன் அருகில் உள்ள கொரியர் ஆபீஸில் வேலை செய்யும் பையன் என்று.

பிறகு வேகமாக நான் அந்த கொரியர் ஆபீஸ்க்கு சென்றேன். சென்று அவனை அழைத்தேன். அவனும் வந்து என்னிடம் பேசினான் அப்பொழுது அவனிடம் அந்த போஸ்டரை காண்பித்து ஏன் இப்படி திட்டி வைத்திருக்கிறாய் என்று கேட்டேன். அதனை பார்த்துவிட்டு இது உங்க படமா சார் தெரியாது என்று சகஜமாக கூறினான் அந்த பையன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் சீனு ராமசாமி.